Published:Updated:

நெட், சி.எஸ்.ஐ.ஆர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

 நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

உயர்க்கல்விக்கான நுழைவுத் தேர்வு மற்றும் ஊக்கத் தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகளுக்கான கால அவகாசம்.

மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தீவிரத்தால், நாடு முழுவதும் லாக் டௌன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப் போயிருக்கிறது. குறிப்பாக, மாணவர்களுக்குக் கல்வியாண்டின் இறுதி என்பதால் சில தேர்வுகள் தள்ளிப்போயின. அதில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் முழுமை அடையாத நிலையில், 10 வகுப்புத் தேர்வுகள் முழுமையாகவே நடைபெறாத நிலை தொடர்கிறது. இந்தநிலையில், தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வு மற்றும் சி.எஸ்.ஐ.ஆர், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள், ஊக்கத் தொகை தேர்வுகளுக்கும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசங்களை தேசிய தேர்வு முகமை (national testing agency ) நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்
மாதிரிப் படம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் (National Eligibility Test) தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 16 ஆம் தேதி கடைசி தேதி ஆக இருந்தது. ஆனால், தற்போது அந்தத் தேதி நீடிக்கப்பட்டு, வரும் 31 தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதே போன்று ICAR என்றுசொல்லப்படுகிற வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி இம்மாதம் 15 ஆம் தேதி வரை கடைசி தேதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, அந்தத் தேதியும் நீட்டிக்கப்பட்டு வரும் 31 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தேதியும் நீட்டித்து வரும் 31 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
ஆர்.எம்.முத்துராஜ்

அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளான எம்.எஸ்.சி படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை (JRF ) மற்றும் விரிவுரையாளர் பதவிக்கான தகுதித் தேர்வான (Lectureship) CSIR NET தேர்வு மார்ச் 16 ஆம் தேதி முதல் இம்மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இருந்த நிலையில், தற்போது அந்தத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதியும் 31ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு