Published:Updated:

புகழ்பெற்ற NIFT நிறுவனத்தில் பேஷன் டிசைனிங் படிக்க விருப்பமா... நுழைவுத்தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!

Bachelor of Design பட்டப்படிப்பில் சேர்வதற்கு ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

entrance exam
entrance exam

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Institute of Fashion Technology பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரேலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

entrance exam
entrance exam

இந்தக் கல்வி நிறுவனங்களில் Bachelor of Design (B.Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இரு வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளும், Master of Design (M.Des), Master of Fashion Management (M.F.M) மற்றும் Master of Fashion Technology (M.F.Tech) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

இந்தக் கல்வி நிறுவனத்தின் இளநிலைப் பட்டப்படிப்புகளில் (Bachelor of Design) உள்ள இடங்கள் விவரம்!

Fashion Design - 642

Leather Design - 168

Accessory Design - 600

Textile Design - 558

Knitwear Design - 296

Fashion Communication - 598

என்று மொத்தம் 2,862 இடங்களும், Bachelor of Fashion Technology பட்டப்படிப்பில் Apparel Production எனும் பிரிவில் 518 இடங்களும் இருக்கின்றன.

முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Master of Design படிப்பில் 171 இடங்கள், Master of Fashion Management படிப்பில் 606 இடங்கள், Master of Fashion Technology படிப்பில் 140 இடங்கள் என்று மொத்தம் 917 இடங்கள் இருக்கின்றன. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளாக மொத்தம் 4,297 இடங்கள் இருக்கின்றன.

fashion technology entrance exam
fashion technology entrance exam

கல்வித்தகுதி:

Bachelor of Design பட்டப்படிப்பில் சேர்வதற்கு ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Bachelor of Fashion Technology பட்டப்படிப்பில் சேர்வதற்கு ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புக்கு மூன்றாண்டு இன்ஜினீயரிங் டிப்ளோமா படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Master of Design மற்றும் Master of Fashion Management படிப்புகளில் சேர்வதற்கு ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது NIFT (National Institute of Fashion Technology), NID (National Institute of Design) போன்ற நிறுவனங்கள் வழங்கிய மூன்றாண்டு கால அளவிலான பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Master of Fashion Technology படிப்பில் சேர்வதற்கு NIFT நிறுவனம் வழங்கிய Bachelor of Fashion Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ/பி.டெக் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 1.10.2019 அன்று 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

இத்தேர்வுக்குத் தாமதக் கட்டணமின்றி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.12.2019.
ரூ. 5,000 தாமதக் கட்டணம் சேர்த்துச் செலுத்தி விண்ணப்பிக்கக் கடைசி நாள் 4.1.2020.
entrance exam
entrance exam

நுழைவுத் தேர்வு:

NIFT நிறுவனத்தின் படிப்புகளில் சேர்வதற்கு இந்நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் https://applyadmission.net/nift2020/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் பங்கேற்க பொது / ஓபிசி / பொது – ஈடபிள்யூஎஸ் பிரிவினர் ரூ.2,000, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,000 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்குத் தாமதக் கட்டணமின்றி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.12.2019. விண்ணப்பக் கட்டணத்துடன் ரூ. 5,000/- தாமதக் கட்டணம் சேர்த்துச் செலுத்தி விண்ணப்பிக்கக் கடைசி நாள் 4.1.2020. விண்ணப்பத்தை 1.1.2020 முதல் 4.1.2020 வரை திருத்தவும் புதுப்பிக்கவும் முடியும். விண்ணப்பத்தை 1.1.2020 முதல் 4.1.2020 வரை திருத்தவும் புதுப்பிக்கவும் முடியும்.

தேர்வு மையங்கள்:

இத்தேர்வு தமிழ்நாட்டிலிருக்கும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் 32 மையங்களில் 19.1.2020 அன்று நடைபெற இருக்கிறது. Bachelor of Design மற்றும் Master of Design ஆகிய படிப்புகளுக்குத் தேர்வு நாளில் காலையில் Creative Ability Test -CAT, பிற்பகலில் பொதுத்தகுதித் தேர்வு (General Ability Test (GAT)) எனும் இரண்டு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பெறும். Bachelor of Fashion Technology, Master of Fashion Management, Master of Fashion Technology ஆகிய படிப்புகளுக்குக் காலையில் பொதுத் தகுதித் தேர்வு எனும் எழுத்துத் தேர்வு மட்டும் நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான அனுமதி அட்டையை 10.1.2020 மதியம் 2.00 மணிக்குப் பின்னர் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

entrance exam
entrance exam

இத்தேர்வுகளுக்குப் பின்னர் நிலைத் தேர்வு (Situation Test), குழுக் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்காணல் போன்றவை ஏப்ரல் முதல் மே மாதங்களில் நடத்தப்பெறும்.

மாணவர் சேர்க்கை:

Bachelor of Design படிப்புக்குப் படைப்பாற்றல் தகுதித் தேர்வு 50%, பொதுத் தகுதித் தேர்வு 30% மற்றும் நிலைத் தேர்வு 20% எனக் கணக்கிடப்பட்டும், Master of Design படிப்புக்குப் படைப்பாற்றல் தகுதித் தேர்வு 40%, பொதுத் தகுதித் தேர்வு 30% மற்றும் குழுக்கலந்தாய்வு/நேர்காணல் தேர்வுக்கு 30% எனக் கணக்கிடப்பட்டும், Master of Fashion Management, Master of Fashion Technology ஆகிய படிப்புகளுக்குப் பொதுத் தகுதித் தேர்வு 70% மற்றும் குழுக்கலந்தாய்வு/நேர்காணல் தேர்வுக்கு 30% என கணக்கிடப்பட்டும், Bachelor of Fashion Technology படிப்புக்கு பொதுத் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் கொண்டும் இறுதி முடிவுகள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் மே மாதக் கடைசி வாரத்தில் அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.

entrance exam
entrance exam

அதன் பின்னர் ஜூன் மாதத்தில் இந்திய அரசின் பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வின் (Counselling) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்கள்:

மேலும் கூடுதல் தகவல்களுக்கு, NIFT கல்வி நிறுவனத்தின் https://www.nift.ac.in/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது NIFT கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை நேரில் அணுகியோ, தொலைபேசியில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெறலாம்.

entrance exam
entrance exam

தமிழ்நாட்டிலிருப்பவர்கள் சென்னையிலிருக்கும் NIFT கல்வி நிறுவனத்தின் 044 – 22542759 என்ற தொலைபேசி எண்ணில் வேலைநாள்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.