Published:Updated:

மலைக் கிராம மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியைகள்!

வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்
வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்

பள்ளிகள் திறக்கட்டும் என காத்திராமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில், வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சேவை மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆண்டாகக் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் விநியோகம் போன்ற பணிகளில் கல்வித்துறையினர் தற்போது இயங்கி வருகின்றனர்.

வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்
வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்
ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலைக் கிராமங்களில் போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு பாக்கிய நகர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியைகள், தங்களின் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, மாணவ மாணவிகளுக்குக் கல்வி கற்பித்து வருகின்றனர். பள்ளிகள் திறக்கட்டும் என காத்திராமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில், வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சேவை மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தாவிடம் பேசினோம். ``நம்ம ஸ்கூல்ல எல்.கே.ஜில இருந்து எட்டாவது வரை 100 குழந்தைங்க படிக்கிறாங்க. மொத்தம் 7 டீச்சர்ஸ் இருக்கோம். மாணவர்களோட பெற்றோர்கள் எல்லாருமே வசதி குறைந்த தோட்டத் தொழிலாளர்கள்தாம்.

வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்
வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியைகள்
`அப்போ 2 மாணவர்கள்; இப்போ 66 மாணவர்கள்!' - அரசுப்பள்ளி சாதித்தது எப்படி?

இவங்களுக்குப் படிப்பை தடையில்லாமக் கொடுக்கணும்னு தொடர்ந்து ஆன்லைன் கிளாஸ் நடத்துறோம். கல்வி தொலைக்காட்சியும் பார்க்க வைக்கிறோம். இது மட்டும் இல்லாம நாங்களே நேர்ல போய் பாடம் நடத்துறோம். ரைட்டிங் வொர்க்கும் குடுத்து ஃபாலோ பண்ணிட்டே இருக்கோம். இவங்களுக்கு படிப்பு மறக்காம இருக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு