Published:Updated:

`நோ மாஸ்க்... சத்தமாக வாசிக்கக்கூடாது...'- ஆன்லைன் பொறியியல் தேர்வுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

online exam
online exam ( Photo Courtesy: Pixabay )

இணையவழியில் தேர்வு எனும்போது குழப்பங்கள் மாணவர்களிடையே குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றை தீர்க்க இம்முறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது அண்ணா பல்கலைகழகம்.

இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகள் இணைய வழியில் பிப்ரவரியில் நடக்கவுள்ளன. இந்தத் தேர்வுகள் எப்படி நடத்தப்படவேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பரில் நடக்கவிருந்த இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் நடக்கவுள்ளன. இதற்கான அட்டவணையை ஜனவரி 15-ம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். அதில் பி.இ, பி.டெக். பி.ஆர்க், உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இணையவழியில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Anna University
Anna University

கொரோனவுடன் வாழ பழகி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு அனைவரும் ட்யூன் ஆகிவிட்டனர். இருந்தும் இணையவழியில் தேர்வு எனும்போது மாணவர்களிடையே குழப்பங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றை தீர்க்க இம்முறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது அண்ணா பல்கலைகழகம்.

இந்த நெறிமுறைகளின் சாராம்சம் இதோ...

  • ஒரு மணி நேரம் நடக்கும் இந்த ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். 60 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். தேர்வு எழுதும் போது மாணவர்கள் தங்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது.

  • தேர்வு தொடங்கவதற்கு 10 நிமிடம் முன்பாக மாணவர்கள் தங்கள் கல்லூரி அடையாள அட்டையை வைத்து லாகின் செய்ய வேண்டும். தேர்வு எழுதப் பயன்படுத்தும் லேப்டாப் ஸ்மார்ட்போன் டேப்லெட் ஆகிய சாதனங்களை 2 மணி நேரம் இயங்கும்படி முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • தொடர்ந்து முகம் வெப் கேமராவில் தெளிவாக தெரிய வேண்டும்.

  • தேர்வு தொடர்பான Rough work செய்ய A4 காகிதங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எந்த ஒரு காரணத்திற்காகவும் இருக்கையைவிட்டு எழுந்து செல்லக் கூடாது.

  • முகக் கவசம் போன்றவற்றை வைத்து முகத்தை மறைக்கக்கூடாது.

  • தேர்வெழுதும் மாணவரின் அறையில் வேறு யாரும் இருக்கக்கூடாது.

  • கேள்விகளை சத்தமாக வாசிக்கக் கூடாது.

  • லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினி என எதில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வில் பங்குகொள்ள முடியாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.

அடுத்த கட்டுரைக்கு