மத்திய அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 10 மாணவர்கள் வரை சேர்ப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென இட ஒதுக்கீடு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுப் பள்ளிகளில் சேர ஏராளமான கோரிக்கைகள் வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்ற பிரச்னை எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த பிரச்னையை முதலில் காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி எழுப்பியுள்ளார். ``மத்திய அரசுப் பள்ளி இடங்களுக்கான பரிந்துரைக்காக ஏராளமான கோரிகைகள் வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 10 இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. ஒன்று ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதனால் மக்களவையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் இந்த பிரச்னை குறித்து ஒரு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார். மேலும், ``ஒரு கல்வியாண்டில் 10 மாணவர்களை மத்திய அரசுப் பள்ளிகளில் சேர்க்கப் பரிந்துரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை முடிவுக்கு வர வேண்டுமா என்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் அரசுக் கூட்டத்தை நடத்தட்டும். பாரபட்சமான இந்த ஒதுக்கீடு ஏன் வேண்டும்" எனக் குறிப்பிட்டு பேசினார்.

தொடக்கத்தில் கல்வி ஆண்டுக்கு இரண்டாக இருந்த இட ஒதுக்கீடு ஐந்தாகவும், தற்போது பத்து இடங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ``நாங்கள் மக்களின் பிரதிநிதிகள்தானே தவிர, குறிப்பிட்ட சிலரின் பிரதிநிதிகள் அல்லர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இட ஒதுக்கீட்டை முடிப்பதில் ஒருமித்த கருத்தோடு இருந்தால் அந்தத் திசையில் அரசாங்கம் செயல்பட முடியும்'' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நடவடிக்கையை எதிர்த்து, மத்திய அரசுப் பள்ளி இடங்களுக்கான பரிந்துரைகளுக்கான கோரிக்கைகள் அதிக அளவில் இருப்பதால் இந்த இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினர்.