Published:Updated:

வனவிலங்குகள் அபாயம், பாழடைந்த கட்டடம், ஒழுகும் மழைநீர்; கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப்பள்ளி அவலம்!

பாழடைந்துள்ள பள்ளி

மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை உள்ளது. பள்ளி வனப்பகுதியையொட்டியுள்ளதாலும், சுற்றுச்சுவர் இல்லாததாலும் வனவிலங்குகள் அவ்வப்போது பள்ளி வளாகத்துக்கு வருவதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு வருகின்றனர்.

வனவிலங்குகள் அபாயம், பாழடைந்த கட்டடம், ஒழுகும் மழைநீர்; கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப்பள்ளி அவலம்!

மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை உள்ளது. பள்ளி வனப்பகுதியையொட்டியுள்ளதாலும், சுற்றுச்சுவர் இல்லாததாலும் வனவிலங்குகள் அவ்வப்போது பள்ளி வளாகத்துக்கு வருவதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு வருகின்றனர்.

Published:Updated:
பாழடைந்துள்ள பள்ளி

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் தமிழக அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள ஒரே தமிழக அரசுப் பள்ளி என்ற பெருமை இந்தப் பள்ளிக்கு உண்டு. இப்பள்ளி தென்தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய முல்லை பெரியாறு அணை நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தேக்கடி படகுத்துறை அருகே அமைந்துள்ளது.

தேக்கடி அரசு தொடக்கப் பள்ளி
தேக்கடி அரசு தொடக்கப் பள்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முல்லை பெரியாறு அணையில் பணியாற்றிய தமிழக ஊழியர்களுக்காக 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தேக்கடி அரசுத் தொடக்கப்பள்ளி. ஆரம்பக் காலங்களில் 40 முதல் 50 மாணவர்கள் வரை இப்பள்ளியில் பயின்று வந்தனர். தற்போது இப்பள்ளியில் 4 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 12 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஓர் ஆசிரியை வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக, தேக்கடி ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழலைக் கொண்டது. இத்தகையை சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியின் மேற்கூரையில் தொடர்மழை மற்றும் காற்றால் மரங்கள் விழுந்து கூரைகள் சேதமடைந்தன. இதையடுத்து மழை பெய்யும் போதெல்லாம், மேற்கூரையிலிருந்து மழைநீர் ஒழுகி வகுப்பறையில் விழுந்ததால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மாணவர்கள்
மாணவர்கள்

மேலும், பள்ளி வனப்பகுதியையொட்டியுள்ளதாலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும் வனவிலங்குகள் அவ்வப்போது பள்ளி வளாகத்துக்கு வருவதால் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடனே பள்ளிக்கு வரும் நிலை இருக்கிறது. பள்ளிக் கட்டடத்துக்கு செல்வதற்கு படிக்கட்டுகூட இல்லாததால் மழைக்காலத்தில் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, அட்டை, உன்னிக் கடிகளால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுமட்டுமல்லாது பள்ளியின் பின்புறப்பகுதி கட்டடம் முழுவதும் பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. ஜன்னல்கள் உடைந்து தொங்குகின்றன. இதனால் பள்ளியின் முன்பகுதியில் மட்டும் மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனிடம் பேசினோம். ``கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளியை சீரமைத்துத் தரக்கோரி கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்துவிட்டேன். இந்தப் பள்ளி நிர்வாகம் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலும், கட்டடம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும் உள்ளதால் அவர்களிடமும் மனு அளித்தோம்.

தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்
தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்

ஒருசில அதிகாரிகள் நேரடியாக வந்து பார்த்துச் சென்றனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. என்னுடைய சேமிப்பில் இருந்த 30,000 ரூபாயை எடுத்து சில வேலைகளைச் செய்துள்ளேன். மேலும், இந்தப் பள்ளியை சிறப்பான நிலைக்குக் கொண்டுவரும் வரையில் வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் பெற்றும் செல்லக் கூடாது என்ற உறுதியோடு இருக்கிறேன். குழந்தைகளின் நிலையைக் கவனத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரே தமிழக அரசுப் பள்ளி என்ற பெருமை கொண்ட பள்ளியை சீரமைத்துப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism