Published:Updated:

`முன்னாள் ஆட்சியர்கள் போட்ட விதை!' - மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த பெரம்பலூர்

பெரம்பலூர்

தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர், கல்வித்துறையில் படிப்படியாக முன்னேறி மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதற்குக் காரணம் `முன்னாள் ஆட்சியர்கள் போட்ட விதை!'தான் என்கின்றனர்.

`முன்னாள் ஆட்சியர்கள் போட்ட விதை!' - மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த பெரம்பலூர்

தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர், கல்வித்துறையில் படிப்படியாக முன்னேறி மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதற்குக் காரணம் `முன்னாள் ஆட்சியர்கள் போட்ட விதை!'தான் என்கின்றனர்.

Published:Updated:
பெரம்பலூர்

தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தையும், பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது பெரம்பலூர் மாவட்டம். ``முன்னாள் ஆட்சியர்கள் விதைத்த விதைதான் இன்று மரமாக வளர்ந்துள்ளது" என்கின்றனர் ஆசிரியர்களும் பெற்றோர்களும்.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

தமிழக அரசு பொதுத்தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.95 சதவிகிதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், 10-ம் வகுப்புத் தேர்வில் 97.15 சதவிகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பெரம்பலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள்
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள்

தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டமாகக் கருதப்படும் பெரம்பலூர் மாவட்டம், கல்வித்துறையிலும் படிப்படியாக முன்னேறி வருகிறது. பெரும்பாலும் கிராமப்புறங்களைக் கொண்ட இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர் கல்விக்காகத் திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று வந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களும் அதிகரிக்கத் தொடங்கின.

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர்  தாரேஸ் அகமது
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தாரேஸ் அகமது

பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்களான தாரேஸ் அகமது, நந்தகுமார் ஆகிய இருவரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்றது. இதன் மூலம் கல்வியில் வளர்ச்சியடைந்த சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது பெரம்பலூர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி என்ன செய்தார்கள் அதிகாரிகள் என அரசுப் பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டோம். ``தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுக்கத் திட்டமிட்ட முன்னாள் ஆட்சியர் தாரேஸ் அகமது, `சூப்பர் 30' எனும் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மூன்றாகப் பிரித்தார்.

தாரேஸ் அகமது
தாரேஸ் அகமது

படிப்பறிவில் 50%-க்கு கீழ் உள்ள பள்ளிக்குச் சிவப்பு ஸ்டிக்கர், 70% சதவிகிதம் உள்ள பள்ளிக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80% - 100% உள்ள பள்ளிக்குப் பச்சை ஸ்டிக்கர் என அடையாளத்தை வைத்துப் பிரித்தார். அதன்படி படிப்பறிவு குறைவாக உள்ள பள்ளிக்கு, பத்து நாள்களுக்கு ஒருமுறை நேரில் சென்று வகுப்பு எடுப்பது போல ஆசிரியர்களுக்குப் பல திட்டங்களை வகுத்துக் கொடுத்து எளிதாக மாணவர்கள் கல்வி பயில வழிவகை செய்தார்.

இந்த செயல்பாடுகளால், அவர் இருந்த காலகட்டத்தில் மாணவர்கள் சிறப்பாகப் படித்தனர். தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது. அவருக்கு அடுத்தபடியாக வந்த ஆட்சியர் நந்தகுமாரும் அதே திட்டத்தைக் கையில் எடுத்ததோடு ``ஒரு நாள்... ஒரு பாடம்... ஒரு டெஸ்ட்..." என்கிற புது யுக்தியைக் கையாண்டார்.

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமார்
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமார்

அதில், எந்த மாணவர் எந்தெந்த பாடத்தில் `வீக்' என்பதை எளிதாகக் கண்டுபிடித்து அதன்படி வீக்காக உள்ள பாடத்துக்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்தது பெரம்பலூர் மாவட்டம்.

அதன் பிறகு, ஆட்சியர் சாந்தா பதவி ஏற்ற பிறகு இத்தகைய செயல்பாடுகளில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. தற்போதைய ஆட்சியராக இருக்கும் வெங்கடபிரியா, தாரேஸ் அகமது செயல்படுத்திய திட்டத்தைக் கையில் எடுத்ததோடு மாணவ, மாணவிகளின் படிப்புக்காகத் தொடர்ந்து

தற்போதைய ஆட்சியர்  வெங்கடபிரியா
தற்போதைய ஆட்சியர் வெங்கடபிரியா

ஆசிரியர்களிடம் கலந்து பேசுவதோடு மாணவர்களின் நலனுக்காக சில விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார்" என்றனர் ஆசிரியர்கள். முன்னாள் ஆட்சியர்கள் போட்ட விதை இன்று விருட்சமாகியுள்ளது என்பதே உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism