Published:Updated:

பீகார்: காலேஜ் ஹால் டிக்கெட்டில் மோடி, தோனி ஆகியோரின் புகைப்படங்கள்; அதிர்ச்சியான மாணவர்கள்

ஹால் டிக்கட்டில் பிரதமர் மோடி, தோனி ஆகியோரின் புகைபடங்கள்

பீகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவளுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரது புகைப்படம் இடம்பெற்றிருப்பது வைரலாகி வருகிறது.

பீகார் மாநில பல்கலைக்கழகம் ஒன்றில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வீரர் மகேரந்திர சிங் தோனி, அம்மாநில ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளதால் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம்
லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம்

இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் தோனி பீகார் மாநில ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களும் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது, ``புகைப்படங்கள் மற்றும் தரவுகளை மாணவர்களே பதிவேற்றியதாகவும், அவர்களில் சிலர் புகைப்படங்களை மாற்றி பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளார்.