Published:Updated:

Engineering Counselling: பொறியியல் கலந்தாய்விற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Anna University

முதலில் Choice Filling செய்யும் போது, நாம் நம் வசதிக்கேற்ப எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

Engineering Counselling: பொறியியல் கலந்தாய்விற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

முதலில் Choice Filling செய்யும் போது, நாம் நம் வசதிக்கேற்ப எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

Published:Updated:
Anna University

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் கலந்தாய்வின்போது மாணவர்கள் செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதவை என்ன ? என்பதை விளக்குகிறார் கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார்.

Engineering Counselling
Engineering Counselling

“ கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்றொரு மாய பிம்பம் பரப்பப்பட்டு வந்தது. ஆனால் நல்ல பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் நிறைய பேர் நல்ல வேலைக்குச் செல்கின்றனர். முதலில் Choice Filling செய்யும்போது, நாம் நம் வசதிக்கேற்ப எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இவ்வளவு கல்லூரிகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. மொத்தம் 440 கல்லூரிகள் இந்தக் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளவிருக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் 5 முதல் 20 கோர்ஸ் வரை இருக்கிறது. அதனால் எத்தனை கோர்ஸ் வேண்டுமானாலும் நாம் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கலாம். Choice Filling-ன் போது மாணவர்கள் செய்யும் பெரும்பாலான தவறு ஒன்றிரண்டு கல்லூரிகளை மனதில் வைத்துக்கொண்டு, கலந்தாய்வு நாளில் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது. அப்படி செய்யாமல், கலந்தாய்விற்கு முன்கூட்டியே அக்கல்லூரிகளைக் குறித்து விசாரிக்க வேண்டும். அந்தக் கல்லூரியில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? முதன்மை நிறுவனங்களுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளார்களா? சென்டர் ஆப் எக்சல்ன்ஸ் இருக்கிறதா? ப்ளேஸ்மெண்ட் செல் இருக்கிறதா? போன்ற விஷயங்களை முன்னாள் பொறியியல் மாணவர்களிடமோ, அல்லது ஆசிரியர்களிடமோ சிறந்த கல்லூரிகளைக் குறித்து விசாரித்து, அதன்பின் கலந்தாய்விற்கு முன்னரே ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அண்ணா பல்கலைக்கழக இணையத்தளத்தில் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் உள்ளது. மேலும் tneaonline.org என்ற இணையத்தளத்தில் கடந்த வருட கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்ததெந்த கல்லூரியில் இடம் கிடைத்தது என்று ஒரு பட்டியலும் உள்ளது. அதைப் பார்த்தும் நாம் Choice Filling செய்யலாம். அந்த நேரத்தில் பிறர் சொல்வதை வைத்து கல்லூரி தேர்வு செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்தல் நல்லது. கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தையே கோர்ஸ் தேர்வு செய்வதிலும் காட்ட வேண்டும்.

Engineering
Engineering

சாய்ஸ் பில்லிங் செய்த மூன்று நாட்களில் தற்காலிக சேர்க்கை விண்ணப்பம் வரும். அதில் ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

1. நான் இந்தக் கல்லூரியையே தேர்வு செய்கிறேன்.

2. இந்தக் கல்லூரியைத் தற்காலிகமாக தேர்வு செய்கிறேன். ஆனால் நான் கொடுத்த ஆப்ஷனில் எனக்கு வேறு முந்தைய கல்லூரியில் இடம் கிடைத்தால், அதில் எனக்கு சீட்டு வேண்டும்.

3. எனக்கு இந்தக் கல்லூரி வேண்டாம். நான் தேர்வு செய்த முந்தைய கல்லூரிகளில் தான் இடம் வேண்டும்.

4. எனக்கு இந்தக் கல்லூரி வேண்டாம். நான் இரண்டாவது கலந்தாய்வு சுற்றில் கலந்துக்கொள்கிறேன்.

5. இந்தக் கலந்தாய்வில் இருந்து நான் நீங்குகிறேன்.

இதை நீங்கள் சரியாக பார்த்து உங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் கல்லூரியை தேர்வு செய்து தற்காலிக சேர்க்கை விண்ணப்பம் வந்த ஒரு வாரத்தில் குறிப்பிட்ட கல்லூரியிலோ அல்லது டி.எப்.சி (TNEA Facilitation Centre) சென்டரிலோ கல்லூரிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் உங்கள் சீட்டு கேன்சல் செய்யப்படும். மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொண்டு கலந்தாய்வில் கலந்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார் ஆனந்தம் செல்வகுமார்.