Published:Updated:

"இப்பவே ஃபீஸ் கட்டு!”

கல்வி கட்டணத்தை இப்போதே கட்டுங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்வி கட்டணத்தை இப்போதே கட்டுங்கள்

கட்டுப்படாத கல்வி நிறுவனங்கள்... கவலையில் பெற்றோர்!

"இப்பவே ஃபீஸ் கட்டு!”

கட்டுப்படாத கல்வி நிறுவனங்கள்... கவலையில் பெற்றோர்!

Published:Updated:
கல்வி கட்டணத்தை இப்போதே கட்டுங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கல்வி கட்டணத்தை இப்போதே கட்டுங்கள்
ஊரடங்கு உத்தரவால் ஒட்டுமொத்த தேசமும் முடக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கல்லா கட்டுவதில் குறியாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. `வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை இப்போதே கட்டுங்கள்’ என்று பெற்றோர்களை நிர்பந்திப்பதாக, புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் முழுமையடைவதற்கு முன்னரே கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டது. தேர்வுகள் சரிவர நடைபெறாத சூழலில், 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இதனாலேயே தமிழகத்தில் தேர்வுகளே நடத்தப்படாமல் ஒன்பதாம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ தரப்பட்டுள்ளது.

கொரோனா களேபரத்தால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மும் சீர்குலைந்துள்ளது. பெரும்பாலான மக்கள், வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் ஏராளமான குடும்பங்கள், உணவுக்கே வழி இல்லாமல் தவிக்கின்றன. இப்படியான சூழலில்தான், அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தைக் கட்டும்படி பெற்றோர்களுக்கு பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸப் மூலம் தகவல் அனுப்பியுள்ளன. தலைநகர் டெல்லி தொடங்கி பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

தமிழகத்திலும் ஏப்ரல் 14-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்துமாறு சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி யுள்ளன. பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி உள்ளிட்டோர் இதை கண்டித்துள்ளனர்.

இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவரான அருமைநாதன், “தனியார் பள்ளி களில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெரும்பாலான பெற்றோர், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான். கடன் வாங்கியும் நகைகளை அடமானம் வைத்தும்தான் பெரும்பாலும் அவர்கள் கல்விக்கட்டணத்தைக் கட்டிவந்தார்கள். தற்போது கொரோனா பிரச்னையால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியிருக்கிறது. அதனால்தான் `மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், வீட்டுவரி, வங்கிக்கடன் தவணை போன்ற வற்றை இப்போது கட்டத் தேவையில்லை’ என்று அரசு அறிவித்துள்ளது.

அருமைநாதன், சிஜி தாமஸ், நந்தகுமார்
அருமைநாதன், சிஜி தாமஸ், நந்தகுமார்

இந்த நிலையில், கல்விக்கட்டணத்தைக் கட்டுமாறு பள்ளி நிர்வாகங்கள் சொல்வது கண்டனத்துக்குரியது. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் சராசரியாக 30,000 ரூபாய் தொடங்கி 50,000 ரூபாய் வரை கட்டுவதற்கு பெற்றோர்கள் எங்கே போவார்கள்? இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்” என்றார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்தவுடன் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங் களுக்கு சென்னை மாவட்ட கல்வி அதிகாரி, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தனர்.

"இப்பவே ஃபீஸ் கட்டு!”

இந்தப் பிரச்னை குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸிடம் கேட்டபோது, “அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை இப்போதே செலுத்துமாறு சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கூறியதாகப் புகார்கள் வந்துள்ளன. எனவே, இப்போது கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தி யுள்ளோம்” என்றார்.

அவரிடம், “கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வரும் எனச் சொல்ல முடியாத நிலை தற்போது உள்ளது. ஒருவேளை ஜூன் அல்லது ஜூலையில் பள்ளி திறக்கப்பட்டாலும் இப்போது வருமானம் இழந்து பாதிக்கப் பட்டுள்ள பெற்றோரால் அப்போது கல்விக்கட்டணத்தைச் செலுத்த இயலாது. எனவே, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த உரிய காலஅவகாசம் அளிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிடுமா?” என்று கேட்டோம். அதற்கு, “இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்றார்.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசியபோது, “பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டுக்கான மூன்று மாத கட்டணமே இன்னும் வாங்கப்படவில்லை. தற்போது கொரோனா பிரச்னையால் எல்லா தரப்பு மக்களுமே பாதிக்கப் பட்டிருக்கும்போது, அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை நாங்கள் கேட்போமா? அப்படி எந்தப் பள்ளி நிர்வாகமும் கேட்கவில்லை. நாங்களும் மனிதர்கள்தாம்” என்றார்.

உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு உடனடியாக கவனிக்கவேண்டும்.