தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் முடிந்து, கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால், புதுச்சேரியில் இன்னும் இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை நடத்தாமல் மாணவர்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது ‘சென்டாக்’ அமைப்பு.

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில், அரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களை தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் சென்டாக் அமைப்பு (CENTAC - Centralised Admission Committee). சரியான திட்டமிடலும் விதிமுறைகளும் இல்லாததால், ஒவ்வோர் ஆண்டும் கடைசி நேரம் வரை மாணவர் களைக் காக்கவைப்பதை வாடிக்கை யாகவே வைத்திருக்கிறது இந்த அமைப்பு.

காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய மூன்று பிராந்தியங்களும் முறையே தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்திருக்கின்றன. இதனால், புதுச்சேரி எல்லையையொட்டிய பகுதிகளில் வசிக்கும் இந்த மூன்று மாநில மாணவர்களில் சிலர், போலி இருப்பிடச் சான்றிதழ்களைக் கொடுத்து, புதுச்சேரிக் கல்லூரி களில் சேர்ந்துவிடுகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த பெற்றோர் - மாணவர்கள் அமைப்பு, இந்த முறைகேட்டை ஒவ்வோர் ஆண்டும் கண்டுபிடித்துப் போராடித்தான் புதுச்சேரி மாணவர்களுக்கான மருத்துவ இடங்களைப் பெற வேண்டியிருக்கிறது. போலிச் சான்றிதழ்களைச் சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, சென்டாக் அதிகாரிகளின் முக்கிய வேலை. ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்வதேயில்லை.

பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி நம்மிடம், ‘‘புதுச்சேரியில் மருத்துவ சீட்களுக்கு மட்டும் நான்கு முறை திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிட்டனர். `திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல்’ என்று எந்த மாநில அரசும் வெளியிடுவதில்லை. தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முதலில் நிரம்ப வேண்டும் என்பதற்காகத்தான், வேண்டுமென்றே சென்டாக் தாமதப்படுத்துகிறது. இதனால், அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற குழப்பத்தில் மாணவர்கள் பலரும் தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துச் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைவிட கொடுமை... பொறியியல் படிப்புக்கு இன்னும் முதற்கட்ட கலந்தாய்வே நடத்தப்படவில்லை. முன்பெல்லாம், விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி முடிந்த ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இப்போது 45 நாள்கள் கழித்துதான் வெளியிடப்படுகிறது.

அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். இதற்குக் காரணம், சென்டாக் அமைப்பைக் கவனித்துவரும் அந்த அமைப்பின் உறுப்பினரும், பொறியியல் கல்லூரிப் பேராசிரியருமான சிவராஜ்தான். இவருக்கு ஆன்லைன் குறித்து போதுமான அனுபவம் இல்லாததால், புதுச்சேரி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

இதுகுறித்துப் பேசிய பெற்றோர் தரப்பினர், ‘‘புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் 240 இடங்கைள், சுய ஒதுக்கீடு மூலம் நிரப்பிக்கொள்வதற்காக, ஜோஸா (JOSAA - Joint Seat Allocation Authority) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வருடத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரிவில், வெளி மாநிலத்தவருக்கு 180 இடங்களும், புதுச்சேரி மாணவர்களுக்கு 60 இடங்களும் ஒதுக்கப்படும். இதன் கடைசிக்கட்ட கலந்தாய்வு, ஜூலை 19-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதேபோல, புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் வெளி மாநில மாணவர்களுக்கு வருடத்துக்கு 57,000 ரூபாய் கட்டணத்தில் 48 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை

27-ம் தேதிதான் வெளியிட்டனர். தாமதமான கலந்தாய்வு காரணமாக, தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மாணவர்கள் பலரும், அதிக கட்டணம் செலுத்தி ஜோஸா மூலம் முன்னதாகவே கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர்’’ என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்டாக் உறுப்பினரான பேராசிரியர் சிவராஜிடம் பேசினோம். ‘‘எந்த முறைகேடும் நடக்கவில்லை. பொருளாதாரரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை இணைத்து வெளியிடுவதில்தான் தாமதம் ஏற்பட்டது.

எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதால்தான் தரவரிசைப் பட்டியலைத் திருத்தி வெளியிடுகிறோம். இந்தப் பட்டியலை ஓரிரு நாள்கள் தள்ளி வெளியிடுவதால் ஒரு பிரச்னையுமில்லை. தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவதாகச் சொல்வது, தவறான குற்றச்சாட்டு’’ என்றார்.

இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனிடம் பேசினோம். ‘‘மாணவர்களின் நலன் கருதி அனைத்து கலந்தாய்வுகளையும் விரைந்து முடிக்குமாறுதான் அதிகாரிகளிடம் கூறியிருந்தேன். தாமதத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து உடனே அவர்களிடம் விசாரிக்கிறேன்’’ என்றார்.

தொடர்ச்சியாக சென்டாக் மீது புகார்கள் வந்துகொண்டே இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பெற்றோரின் கோரிக்கை.