Published:Updated:

‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது!’’

பதக்கத்தை மறுத்தபோது...
பிரீமியம் ஸ்டோரி
News
பதக்கத்தை மறுத்தபோது...

பதக்கத்தை மறுத்த ரபீஹா பளிச்

‘மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தரக் கூடாது’ என்று இந்திய அளவில் மாணவர் சமுதாயம் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், ‘நீங்கள் ஹிஜாப் அணிந்திருக் கிறீர்கள். என்.ஆர்.சி, சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நீங்கள் போராடக்கூடும்’ என்று புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரபீஹா என்கிற மாணவி வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலையில், தனக்குரிய தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து வியக்கவைத்திருக்கும் ரபீஹாவிடம் உரையாடினோம்...

‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது!’’

‘‘என்னதான் நடந்தது?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் தங்கப்பதக்கம் வழங்க இருப்பதாகச் சொன்னார்கள். முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் மாணவியான என் பெயரும் பதக்கப் பட்டியலில் இருந்தது. பட்டம் பெற இருந்த எல்லோரும் ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குடியரசுத் தலைவர் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பு என்னிடம் வந்த செக்யூரிட்டி ஒருவர், ‘உங்களிடம் பேச வேண்டும்’ என வெளியே அழைத்துச் சென்று, ஆடிட்டோரியத்துக்கு வெளியில் நிற்கவைத்தார். உள்ளே நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ‘ஏன் என்னை வெளியே நிற்க வைத்திருக்கிறீர்கள், உள்ளே விடுங்கள்..!’ என்று கேட்டேன். ‘நீங்கள் உள்ளே செல்ல அனுமதி யில்லை. வெளியிலேயே காத்திருங்கள்’ என்றார் செக்யூரிட்டி. ‘ஏன்... என்ன காரணம்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள் போராட்டம் செய்யக்கூடும் என நினைத்திருப்பார்கள்’ என்றார். முறையான காரணத்தைச் சொல்லவில்லை. என்னையும் சேர்த்து மொத்தம் பத்து பேருக்கு மட்டும்தான் குடியரசுத் தலைவர் தங்கப்பதக்கம் வழங்குவதாக இருந்தது. ஆனால், குடியரசுத் தலைவர் சென்ற பிறகு, வேறு யாரையோ வைத்து எனக்கு பட்டம் அளித்தனர்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரபீஹா
ரபீஹா

‘‘நீங்கள் வெளியேற்றப்பட்டதற்கு என்னதான் காரணம் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘இப்போதுவரை என்னிடம் காரணம் எதுவும் சொல்லப்பட வில்லை. அங்கே இருந்த மற்ற மாணவர்கள் செக்யூரிட்டியிடம் கேட்டபோது ‘அவர் ஸ்கார்ஃப் அணிந்திருந்தார், அதுகூட காரணமாக இருக்கலாம்’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘அவர் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என நினைத்தோம். அதனால்தான் வெளியே நிற்கவைத்தோம்’ என்று காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.அப்படிப்பார்த்தால், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகக் குரல்கொடுத்த வேறு சில மாணவர்களும் பட்டமளிப்பு விழா அரங்குக்குள் இருந்தார்கள். அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும் வெளியேற்ற என்ன காரணம்?”

“புதுச்சேரிப் பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு விளக்கம் அளிக்கவில்லையா?”

‘‘நான் வெளியேற்றப்பட்ட விவரத்தை நிர்வாகத்துக்கே தெரியப்படுத்தவில்லை என நினைக்கிறேன்.”

பதக்கத்தை மறுத்தபோது...
பதக்கத்தை மறுத்தபோது...

“தொலைக்காட்சி ஒன்றுக்கு நீங்கள் பேட்டியளித்தபோது, உங்கள் குரல் தழுதழுத்திருந்தது. விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து உங்கள் மனநிலை என்ன?’’

‘‘மேடையேறி பட்டம் பெறுவது என்பது, எல்லோருக்குமே மிகப்பெரிய கனவு. எனக்கும் அப்படித்தான். ஆனால், நான் போராடுவேன் என நினைத்து குடியரசுத் தலைவர் கையால் பட்டம் வாங்கவிடாமல் என்னை வெளியேற்றி விட்டனர். முதலில் நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்; ஆத்திரமடைந்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அவமானம் துணிச்சலாக மாறியது. தங்கப்பதக்கம் வேண்டாம் என என்னைச் சொல்லவைத்தது அந்தத் துணிச்சல்தான். நான் என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரானவள்தான். ஆனால், அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த பட்டமளிப்பு விழாவில் தடை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. என்னைப்போலவே பலர் அங்கே பட்டம் பெற கனவுடன் காத்துக்கொண்டிருந்தனர். சகமாணவியான என்னால் அதை எப்படித் தகர்க்க முடியும்?’’

‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது!’’

‘‘உங்கள் குடும்பத்தினர் என்ன கூறினார்கள்?’’

‘‘என்ன நடந்தது என்றே ஆரம்பத்தில் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடந்தவற்றைச் சொல்லி அவர்களுக்குப் புரியவைத்தேன். அதன் பிறகு, ‘இதனால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்’ என்று உறுதி கூறினார்கள். ‘நீ செய்த செயல் எங்களுக்குப் பெருமை யளிக்கிறது. மாணவர்களைக் கண்டு அதிகாரம் பயப்படும் என்பதற்கு இது உதாரணம்’ என்றார்கள். கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. மாணவர்களின் வலிமையை அதிகாரவர்க்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்.”

‘‘குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?’’

‘‘இந்த இரண்டு விஷச்சட்டங்களுமே, நீங்கள் இந்தியராக இல்லையென்றாலும் குறிப்பிட்ட மதத்தவராக இருந்தால் உங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்கிறது. ஆளுங்கட்சி என்ன விளக்கம் கொடுத்தாலும், மதத்தின் பெயரால் குடியுரிமை தருவது அரசியலமைப்புக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானதுதான். அது, இந்தியா என்னும் கட்டமைப்பையே சிதைத்துவிடும். மதத்தின் அடிப்படையில் மக்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் தெளிவாக இருக்கிறேன்.”