புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மாணவர்களே இல்லை’ என்று கூறி அரசால் மூடப்பட்ட குளத்தூர் மற்றும் சின்னபட்டமங்கலம் அரசு தொடக்கப் பள்ளிகளை, இரண்டு ஊர் மக்களும் ஒன்றுகூடி மீண்டும் திறக்கவைத்துள்ளனர். வெளியூர்களில் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை தொடக்கப் பள்ளியிலேயே சேர்த்து, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் செயல்படவைத்து அசத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மற்றும் மாணவர்களே இல்லாத பள்ளிகளை அரசு மூடப்போவதாக, தகவல்கள் வெளியாயின. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்தான், ‘‘பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகளுக்குப் பதிலாக, அங்கு தற்காலிக நூலகம் கொண்டுவரப்படும்’’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாணவர்களே இல்லாத பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்தில் ஆறு பள்ளிகள், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் தலா நான்கு பள்ளிகள், விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா மூன்று பள்ளிகள், விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா இரண்டு பள்ளிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கோவை, தேனி மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி எனக் கணக்கெடுக்கப்பட்டது. இவற்றை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் மூடிவிட்டு, அங்கு நூலகங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 46 பள்ளிகள் மூடப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், பட்டியலில் இருந்த குளத்தூர் தொடக்கப் பள்ளியை மூடிவிட்டு ஆசிரியர் வெளியே வந்தார். பள்ளி முன்பு கூடிய கிராம மக்கள், ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘நீங்கள் தொடக்கப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வில்லை. அதனால் அரசு மூடிவிட்டது’’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். இதையடுத்து, குளத்தூர் கிராம மக்கள் அவசர அவசரமாக கிராமக் கூட்டத்தைக் கூட்டினர். அதில், ‘‘இனிவரும் காலங்களில் கிராம மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தொடக்கப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். சில பெற்றோர், தனியார் பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை உடனடியாக வாங்கிவந்தனர். கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்த பெற்றோர், 12 பிள்ளைகளுடன் பள்ளியின் வாசலில் காத்திருந்தனர். அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச் செல்வம், பூட்டப்பட்டப் பள்ளியைத் திறந்து மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

தற்போது ஊர்மக்கள் சேர்ந்து தங்கள் செலவில் தற்காலிக ஆசிரியர் ஒருவரைப் பள்ளியில் நியமித்துள்ளனர். குளத்தூர் பள்ளி திறக்கப்பட்ட தகவல் மூடப்பட்ட மற்றொரு பள்ளி இருக்கும் சின்னபட்ட மங்கலத்துக்கும் பரவவே, கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்து மீண்டும் செயல்படவைத்துள்ளனர். தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்க, மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது புதுக்கோட்டை.

குளத்தூரைச் சேர்ந்த காந்திமதி, ‘‘தொடக்கப்பள்ளி மூடுவதற்கு முன்னால, என் பொண்ணு மட்டும்தான் அங்க படிச்சிக்கிட்டு இருந்தா. ‘ஒத்தபிள்ளையா படிச்சிக்கிட்டு இருக்கு. அதை தனியார் பள்ளியில சேர்த்துவிடுவோம்’னு கணவர் சொன்னாரு. `அப்படி நடந்தா, நம்ம ஊரு பள்ளியை மூடிருவாங்க’னு சொல்லி அவரோடுப் போராடினேன். ஆனா, பிள்ளையைப் பிடிவாதமா தனியார் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்துட்டாரு. தனியார் பள்ளி மோகத்தால, பிள்ளைகளை எல்லோரும் அங்க சேர்த்ததாலத்தான் பள்ளி மூடப்படும் நிலை உருவாச்சு. இப்போ, பள்ளியைத் திறக்க கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுகூடிட்டோம். என் பிள்ளையை, திரும்பவும் எங்க ஊர் அரசுப் பள்ளியில் சேர்த்துட்டேன்’’ என்றார் பூரிப்புடன்.

சின்னபட்டமங்கலத்தில் வேறு மாதிரியான கதை. அந்த ஊரைச் சேர்ந்த அந்தோணி, ‘‘இதுக்கு முன்னால இங்க பள்ளி ஆசிரியரா இருந்தவரு, சரியாவே பள்ளிக்கு வர்றதில்லை. இந்த வருஷம் பள்ளியை மூடப்போறாங்கன்னு சொல்லி, புது அட்மிஷன் போட மறுத்துட்டாரு. படிச்ச ஒண்ணு ரெண்டு பிள்ளைகளின் பெற்றோர்களையும் கூப்பிட்டு, பசங்களை வேறு பள்ளியில சேர்க்கச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். அதனால, கிராம மக்கள் போராடி அந்த ஆசிரியரை மாத்திட்டோம். ஆனா, பள்ளிக்கூடத்தை இப்படி திடீர்னு மூடுவாங்கன்னு எதிர்பார்க்கலை. மறுபடியும் போராடி இப்போ திறந்திட்டோம். பத்துப் பிள்ளைகளுக்கும்மேல சேர்த்திட்டோம். ஆசிரியரும் தினமும் வந்து பாடம் நடத்துறாரு. அடுத்த வருஷம் சேர்க்கையை அதிகப்படுத்துவோம்” என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச் செல்வத்திடம் பேசியபோது, ‘‘இந்தப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கக் கூறி அதிகாரிகளும் ஆசிரியர்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். ஆனாலும், யாரும் பிள்ளைகளைச் சேர்க்க முன்வரவில்லை. தற்போது, பொதுமக்களே தங்கள் பிள்ளைகளைத் தொடக்கப் பள்ளியில் சேர்க்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் சேர்க்கப்பட்டதால், மீண்டும் பள்ளியைத் திறந்துள்ளோம். இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்படும்’’ என்றார்.