Published:Updated:

"தேர்வு விடைத்தாளில் ரூ.100 மட்டும் வையுங்கள்!" - உ.பி பள்ளி முதல்வரின் சர்ச்சைக்குரிய பேச்சு  

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம் ( ANI )

ஒருவேளை, தேர்வெழுதும்போது கண்காணிப்பாளர்களிடம் சிக்கிக் கொண்டால், அவர்கள் இரண்டு அடி கொடுப்பார்கள். மற்றபடி எந்தவித நடவடிக்கையும் இருக்காது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் "விடைத்தாளில் நூறு ரூபாய் மட்டும் வைத்தால் போதும், நீங்கள் தேர்ச்சி பெற்றுவிடலாம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மனு மாவட்டத்தில், தனியார் பள்ளியின் முதல்வராக இருப்பவர் பிரவீன் மால். இவர், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் எவ்வாறு மோசடி செய்து தேர்வில் வெற்றிபெறலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். அதுகுறித்த வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகி அதிரவைத்துள்ளது.

அந்த வீடியோவில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்துக்கு, சுதந்திரமாக நீங்கள் தேர்வெழுதுங்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அந்த தேர்வுத்தாளில் எழுதிவையுங்கள். ஒருவரை ஒருவர் கையை மட்டும் பிடிக்காதீர்கள். மேலும், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே தேர்வெழுதுங்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள்தான். அதனால் அவர்களைக் கண்டு நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

ஒருவேளை, தேர்வெழுதும்போது கண்காணிப்பாளர்களிடம் சிக்கிக்கொண்டால், அவர்கள் இரண்டு அடி கொடுப்பார்கள். மற்றபடி எந்தவித நடவடிக்கையும் இருக்காது. அதனால் யாரும் பயப்பட வேண்டாம். மேலும், எந்தக் கேள்வியையும் தேர்வுத் தாளில் விட்டுவைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அந்த தேர்வுத் தாளில் 100 ரூபாய் வைத்துக் கொடுங்கள். ஆசிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு மதிப்பெண்ணை வழங்குவார்கள். மேலும், தவறான பதிலை நீங்கள் அளித்திருந்தால், அதறகும் 3 அல்லது 4 மதிப்பெண் போடுவார்கள். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்' என்ற ஸ்லோகனுடன் அந்த நீளமான வீடியோ முடிகிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதைத் தொடர்ந்து, சில பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து இந்த வீடியோ ஆதாரத்தையும், புகார் கடிதத்தையும் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின் பேரில் பிரவீன் மாலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு