Published:Updated:

`நேரத்தை நிர்வகிப்பது எப்படி?’ - விகடன் வெபினாரில் ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் உரையாடலாம்!

விகடன்  கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

`நேரம் என்பது பொக்கிஷம் போன்றது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது’.

அவசர, அவசரமாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிவிட்டு, மாணவர்கள் வீட்டுக்குள்ளாகவே முடங்கியிருக்கிறார்கள். இப்படியான ஒரு நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரித்திருப்பார்கள். கருத்தரங்குகளுக்குச் சென்று ஆலோசனை பெற்றிருப்பார்கள். தற்போதைய இந்தச் சூழல் மாணவர்களை இயங்கவிடாமல் முடக்கியுள்ளது.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

இந்தச் சூழலில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கைகொடுக்கும் வகையில் ஆனந்த விகடன், `மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ’ ஒன்றை இணையவழியில் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மே 9, மே 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிரபல கல்வியாளர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் பங்குபெறும் வெபினாரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெபினாரில் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்று கலந்துரையாடலாம்.உயர்கல்வியில் என்ன படிக்கலாம்?,

கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகள் என்னென்ன?, எந்தப் படிப்புக்கு எதிர்காலம்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஆலோசனை பெறலாம். மே 9 ஆம் தேதி நடக்கவுள்ள வெபினாரில் " 'YOU CAN DO IT " என்ற தலைப்பில் உங்களோடு உரையாட இருக்கிறார், ரயில்வே டி.ஜி.பி மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் டாக்டர் சைலேந்திர பாபு.

இதுகுறித்து பேசிய சைலேந்திரபாபு, ``நல்ல சூழலும் மோசமான சூழலும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். நம்மை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக மோசமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கின்ற சூழல். இந்தச் சூழலை மாணவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ள் வேண்டும். ‘எந்தத் திறமைகள் தங்களிடம் இல்லை என்று நினைக்கிறார்களோ அதை வளர்த்துக்கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

வீட்டில் இருந்துகொண்டே எழுதப் பழகலாம். அதன்மூலம் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகலாம். ஆங்கிலம் தெரியவில்லையா? ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளலாம். அது எதிர்கால வேலைக்குப் பயனுள்ளதாக இருக்கும். நேரம் என்பது பொக்கிஷம் போன்றது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது. வாருங்கள்... இதுகுறித்து விகடன் வெபினாரில் உரையாடுவோம்" என்கிறார் அவர்.

1987- ஆண்டுக் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று , தமிழ்நாடு காவல்துறையில் தனது பணியைத் தொடங்கியவர், ஐந்து மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், இரண்டு சரகங்களில் போலீஸ் டி.ஐ.ஜியாகவும் பணியாற்றியுள்ளார்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

கோவை மாநகர இணை ஆணையராகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவமும் உண்டு. சிறைத்துறைத் தலைவராகப் பணியாற்றிய இவர், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

50 வயதிற்குப் பிறகு 50 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர். விளையாட்டின் மீது ஆர்வமுள்ள இவர், சிறந்த நீச்சல் வீரரும் கூட. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்து தனது மன வலிமையையும் உடல் வலிமையையும் வெளிக்காட்டியவர். 56 வயதில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரை 28 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்தில் நீந்திக் கடந்தார். சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாகவும், தன்னம்பிக்கை தொடர்பாகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களிடம் உரையாற்றிவரும் சைலேந்திரபாபுவிடம் நீங்களும் கேள்விகள் கேட்கலாம். உரையாடலாம். கீழே உள்ள லிங்கில் உங்களைப்பற்றிய விவரங்களைப் பதிவு செய்துவிட்டுத் தயாராகுங்கள்!

விவரங்களைப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்..

அடுத்த கட்டுரைக்கு