Published:Updated:

``கிண்டர் கார்டன் குழந்தைகள் இந்த வருடம் வீட்டிலேயே படிக்கட்டும்!'' #SchoolReopen #SurveyResult

school reopen
school reopen

‘’பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி நன்கு அறிந்த, அவற்றைப் பின்பற்றக்கூடிய மருத்துவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும்போது, என் ஐந்து வயது மகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால்...''

உலகம் முழுக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மாஸ்க், சானிட்டைஸர், சமூக இடைவெளி என்று பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுக்கடங்காமல்தான் இருக்கிறது. அதனால் அரசும் ஜுன் மாதம் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவுடன் வாழப் பழக ஆரம்பித்த பிறகு, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முதல் மளிகைக்கடைகள்வரை அனைத்தும் லாக்டௌன் தளர்வில் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

school reopen
school reopen

இதைத் தொடர்ந்து, பள்ளிகளும் அடுத்தடுத்த மாதங்களில் திறக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன. '2020-2021 கல்வியாண்டு ஆரம்பித்துவிட்டதால் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும்' என்று ஒரு தரப்பினர் சொல்ல, 'வரும் மாதங்களில் கோவிட்-19 உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு பள்ளிகளைத் திறப்பது ஆபத்தானது' என்ற குரல்களும் எழ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், 'ஜூலை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பள்ளிக்கூடங்களைத் திறந்தால் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவீர்களா?' என்று விகடன் இணையதளத்தில் ஒரு சர்வே மேற்கொண்டோம். கூடவே, அது குறித்த வாசகர்களின் கருத்துகளையும் கேட்டிருந்தோம். அவற்றின் தொகுப்பு இங்கே...

school reopen
school reopen

சர்வே முடிவுகள்

School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result
School Reopen Survey Result

வாசகர்களின் கருத்துகள்...

‘’பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது. ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் பள்ளிகள் திறந்த பின்பு முக்கியமான பாடங்களை நடத்தித் தேர்வு நடத்திக்கொள்ளலாம்.’’
வாசுதேவன்
‘’முதலில் பொதுமக்களும் மாணவர்களும் கொரோனாவிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம். அதன் பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றிப் பார்ப்போம்.’’
ராஜசேகரன்
‘’ஸ்கூல் பஸ், ஆட்டோ, வேன் போன்றவை நன்கு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஓட்டுநர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் பலர் தங்கவைக்கப்பட்டிருந்ததால், கிருமிநீக்கம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.’’
சரளா ஞானசேகரன்
''கல்வியைவிட குழந்தைகளின் உயிர் முக்கியம். படிப்பை அடுத்த வருடம்கூடப் படித்துவிடலாம். ஆனால், உயிர் போனால் வராது. எங்கள் வீட்டுக் குழந்தைகளை அனுப்பினால் அவர்களுக்குக் கொரோனா வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? பெரிய பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள்கூட இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைப்பது எப்படி? இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் குறித்து அரசு திட்டமிடுவதற்கு முன் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவது ரிஸ்க்தான்.’’
மாஸ்டர்
‘’குழந்தைகளுக்குக் கல்வி மிக மிக முக்கியம். அதனால் பாதுகாப்பு வழிமுறைகளை ஃபாலோ செய்து பள்ளிக்கு அனுப்புவதே சரி.’’
கார்த்திக்
’’பள்ளிகள் செயல்படத் தொடங்க வேண்டும் என்பது அவசியமானது. கல்வி பாதிக்கப்படக் கூடாது. அதே நேரம், பள்ளிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. அதற்குத் தேவையான வழிமுறைகளை அரசு வகுக்கவேண்டும். இது நடைமுறைக்கு வந்த பிறகே மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பமுடியும்.’’
கிருபாகரன் நல்லசாமி
’’பெற்றோர்களாகிய எங்களுக்குப் பிள்ளைகளின் படிப்பைவிட அவர்களின் ஆரோக்கியமே முக்கியமானது. எனவே இன்றைய சூழலில் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம்.’’
இயேசு எம்
’’குழந்தைகளுக்குக் கல்வி மிகவும் அவசியம். அதனால் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி அனுப்பிவைக்க வேண்டும்.’’
வேனட் பிரியா
‘’கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரைக்கும் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாது.’’
ஞான சொரூபன். என்
‘’பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி நன்கு அறிந்த, அவற்றைப் பின்பற்றக்கூடிய மருத்துவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்படும்போது, என் ஐந்து வயது மகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால், அவளுக்குக் கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? கொரோனா பயம் தீரும் வரைக்கும், அது அடுத்த வருடம் என்றாலும் சரி, என் மகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாது.’’
முத்துவேல். சி
‘’தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வகுப்பில் ஒரு பிள்ளைக்கு இருந்தால்கூட மற்ற பிள்ளைகளுக்கும் பரவிவிடும். எனவே எல்.கே.ஜியில் இருந்து 7-ம் வகுப்புப் மாணவர்கள் வரை ஆன்லைன் வகுப்புகள் எடுக்கலாம். இதற்கு மேல் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளத் தெரியும். அதனால், எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பலாம்.’’
ரமணன்
‘’ஆன்லைன் வகுப்புகளில் கல்வி கற்றாலும், பள்ளிக்கூடம் சென்று படித்தால்தான் கல்வியின் தரம் முழுமை பெறும். பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தால் சுகாதாரம் தொடர்பான வேலைகள் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். கொரோனாவால் எல்லோரும் பலவிதங்களில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வருங்கால சந்ததிகளின் கல்வி பாதிக்கப்படுவது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது."
செல்லம். எஸ்
''பள்ளிக்கூடங்களில் ஹேண்ட் வாஷூம் ஹேண்ட் சானிட்டைசரும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருமே கைகளில் கிளவுஸ் அணிந்தபடிதான் இருக்க வேண்டும். ரெஸ்ட் ரூமுக்குப் போனால் குழந்தைகள் கை, கால் அலம்ப டிஸ்இன்ஃபெக்டன்ட் கலந்த தண்ணீரை வையுங்கள். மாணவர்கள் ஒருவருக்கொருவர் எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.''
பத்மா சங்கர்
ஆன்லைன் வகுப்புகளில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை... நிபுணர்கள் வழிகாட்டல்!
''குழந்தைகளை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதனால், இந்த வருடம் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்லவே வேண்டாம். இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரும் வருடம் அடுத்த வகுப்புக்கு புரோமோஷன் கொடுத்துவிடலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை.''
அனியுவன்

மருத்துவர் என்ன சொல்கிறார்?

இதுதொடர்பாக தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

‘’மே மாதத்திலிருந்தே தமிழ்நாட்டிலும் சென்னையிலும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சென்னையின் பல இடங்கள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கின்றன. இன்றைக்கு இருக்கிற சூழலில் இன்னும் ஒரு மாதத்துக்குப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதைப் பற்றி யோசிக்கவே கூடாது. வரும் நாள்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலைப் பொறுத்து, ஒரு மாதம் என்பது இரண்டு, மூன்று மாதங்கள் என்றும் ஆகலாம்.

தொற்றுநோய் மருத்துவர் சித்ரா
தொற்றுநோய் மருத்துவர் சித்ரா

க்ளாஸ் ரூம் என்பது மிகச்சிறிய இடம். மாணவர்கள் நண்பர்களுடன் இருக்கும்போது சமூக இடைவெளியை மறந்துவிடுவார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்தே மருத்துவர்கள் நாங்கள் ஜூன் மற்றும் ஜூலையில்தான் கொரோனா அதன் உச்சத்துக்கு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் சமூக இடைவெளியைச் சரிவரக் கடைப்பிடிக்கவில்லையென்றால், இந்தக் கால அளவு இன்னமும் நீட்டிக்கவே செய்யும். எனவே, தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறவரை பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே சரி’’ என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு