Published:Updated:

"உங்களைச் சந்திப்பதிலும் உங்களுக்காக சிந்திப்பதிலும் எனக்குப் பெருமகிழ்ச்சி"- சகாயம் IAS (VR)

சகாயம் IAS (VR)

விகடன் குழுமம் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகெடமி இணைந்து நடத்தக்கூடிய பயிற்சி முகாம் இம்மாதம் 17-ம் தேதி எத்திராஜ் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய சிறந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்

"உங்களைச் சந்திப்பதிலும் உங்களுக்காக சிந்திப்பதிலும் எனக்குப் பெருமகிழ்ச்சி"- சகாயம் IAS (VR)

விகடன் குழுமம் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகெடமி இணைந்து நடத்தக்கூடிய பயிற்சி முகாம் இம்மாதம் 17-ம் தேதி எத்திராஜ் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய சிறந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்

Published:Updated:
சகாயம் IAS (VR)

“உலகின் மிக பெரிய ஜனநாயகமாக திகழும் நாடு நம் இந்தியா. இந்த நாட்டை ஆள்பவர்கள், ஆட்சி செய்பவர்கள் அரசியல் தளத்தில் உள்ள தலைவர்கள் மட்டும் அல்ல. மாறாக அவர்களுக்கு இணையாக இந்நாட்டை வழிநடத்த கூடியவர்கள் நிர்வாகத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகள் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நாளை இந்த நாட்டினுடைய ஆட்சியை நடத்தக்கூடிய அதுபோன்ற அலுவலர்களாக இன்றைய மாணவ செல்வங்கள் உயர வேண்டும்.

Workshop
Workshop

ஐ.ஏ.எஸ் போன்ற பதவிகளை ஏற்கும்போது இந்நாட்டில் பெருவாரியாக இருக்கக்கூடிய எளிய மக்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை உங்களால் நிகழ்த்த முடியும் என்று நான் நம்புகிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் இத்தேர்விற்காக தயாராகியபோது இன்றைக்கு இருப்பதுபோல அதிக அளவிலான புத்தகங்களோ, வழிகாட்டுதல் நிகழ்வுகளோ, பயிற்சி மையங்களோ இல்லை. ஆனால் இன்று அவை அனைத்தும் மிக சிறந்த வகையில் கிடைக்கக்கூடிய அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் ஒன்றாக விகடன் குழுமம் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகெடமி இணைந்து நடத்தக்கூடிய பயிற்சி முகாம் இம்மாதம் 17-ம் தேதி எத்திராஜ் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய சிறந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். மகத்தான இந்த தேசத்தின் நிர்வாக அமைப்பில் நீங்களும் உயர்பொறுப்பை ஏற்று மாபெரும் மாற்றங்கள் நிகழ்த்துங்கள். வாருங்கள் உங்களை சந்திப்பதிலும் உங்களுக்காக சிந்திப்பதிலும் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்”


விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் (VR), சென்னை மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி துறையின் துணை ஆணையரான M.திவ்யா (IRS) ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர இருக்கும் பயிற்சி முகாமிற்கான முன்பதிவு லிங்க் கீழே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism