Published:Updated:

கற்கை நன்றே - 3 - இளங்கலை முதல் முதுகலை வரை - கைகொடுக்கும் உதவித்தொகை!

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது

கற்கை நன்றே - 3 - இளங்கலை முதல் முதுகலை வரை - கைகொடுக்கும் உதவித்தொகை!

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

இந்தியா முழுக்க அனைத்து மாணவர்களும் உயர்கல்வி (இளங்கலை மற்றும் முதுகலை) கற்க வேண்டும்; அப்போது அவர்களுடைய அன்றாட செலவுகளை எதிர்கொள்வதற்கு அரசு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப்’ (CSSS). இந்த உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதுபற்றி விளக்குகிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வி யாளருமான டாக்டர் ராஜம்மாள்.

‘`முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையி லான இந்த ஸ்காலர்ஷிப், ஒவ்வொரு வருட மும் இந்தியா முழுவதும் 41,000 மாணவிகள் மற்றும் 41,000 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, எஸ்.சி பிரிவினருக்கு 15%, எஸ்.டி-க்கு 7.5%, ஓபிசி 27%, மாற்றுத்திறனாளி களுக்கு 3% என ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 ராஜம்மாள்
ராஜம்மாள்

இளங்கலை, முதுகலை எனத் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படுகிற இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு மருத்துவம், பொறியியல் போன்ற புரொஃபஷனல் படிப்புகளைப் படிக்கவிருப்போரும் விண்ணப் பிக்கலாம். இளங்கலை படிக்கும்போது வருடத்துக்கு 10,000 ரூபாயும், முதுகலை படிக்கும்போது 20,000 ரூபாயும் வழங்கப்படும்.

மருத்துவம் அல்லது பொறியியல் படிக்கிற மாணவர்களுக்கு முதல் மூன்று வருடங்கள் 10,000 ரூபாயும், 4 மற்றும் 5-ம் வருடங்களில் 20,000 ரூபா யும் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்குக்கு தொகை நேரடியாக அனுப்பப்படும். தாங்கள் பயில்கிற கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் மூலமாகத்தான் மாணவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். நேரடியாக அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆன்லைன், ஆஃப்லைன் என இரு வழிகளிலும் விண்ணப் பிக்கலாம்.

கற்கை நன்றே - 3 - இளங்கலை முதல் முதுகலை வரை - கைகொடுக்கும் உதவித்தொகை!

என்னென்ன தகுதிகள்?

* ப்ளஸ் டூ-வில் 80%-க்குமேல் மதிப்பெண் வாங்கியிருந்தால்தான் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 55%-க்கு மேல் மதிப்பெண் வாங்கியிருக்க வேண்டும். 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் மட்டுமே, உதவித்தொகை புதுப் பிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக் கும் தொடர்ந்து வழங்கப்படும். இதற்கான உதவிகளை ஆசிரியர்கள், கல்லூரி நிர் வாகம் மற்றும் பல்கலைக் கழகங்கள் மாணவர் களுக்குச் செய்ய வேண்டும்.

* மாணவர்கள் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும். அதை யும் நேரடி வகுப்பில் பயில வேண்டும்.

* மாணவர்கள் வேறு எந்த உதவித் தொகையையும் வாங்குபவராக இருக்கக் கூடாது.

* இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

தொலைதூர கல்வி மூலம் இளங்கலை அல்லது முதுகலை படிப்பவர்களும் டிப்ளோமா படிப்பவர்களும் சி.எஸ்.எஸ்.எஸ் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை...

வங்கிக்கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பெற்றோரின் வருமானச் சான்றிதழ், செயல்பாட்டில் இருக்கிற செல்போன் நம்பர், இ.மெயில் ஐடி, சாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ் மற்றும் ப்ளஸ் டூ மதிப்பெண் பட்டியல்.

இதில் கவனம் அவசியம்!

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கிற மாணவர் களின் மீது ‘ராகிங்’கில் ஈடுபட்டதற்கான புகார்கள் இருக்கக் கூடாது. இதற்கான நன்னடத்தைச் சான்றிதழை மாணவர்கள் தாங்கள் பயில்கிற கல்லூரியிலிருந்தோ அல்லது பல்கலைக் கழகத்திலிருந்தோ பெற்று விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

ப்ளஸ் டூ-வில் 80% சத விகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் மிக அதிகம். ஆனால், அந்த மாணவர்கள் அத்தனை பேரும் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு முயற்சி செய்வதில்லை என்பதே நிதர்சனம்.

உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வை நம் மாணவர் களுக்குக் கல்வியாளர்களும் ஆசிரியர் களும்தான் ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார் கல்வியாளர் ராஜம்மாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism