Published:Updated:

கற்கை நன்றே - 4 - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை!

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

மத்திய, மாநில அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கற்கை நன்றே - 4 - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை!

மத்திய, மாநில அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

``மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற உதவித்தொகை இது. இந்தியா முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் 2.1 சதவிகிதம் பேர். இவர்கள் வறுமை காரணமாகவோ அல்லது தங்கள் உடல்நிலை காரணமாகவோ பள்ளிப்படிப்பையும் கல்லூரிப்படிப்பையும் கைவிடுவதைத் தடுப்பதற்காக ‘மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை’ (Pre - Matrix scholarship for students with Disabilities) வழங்கப்படுகிறது. படிக்கும் வயதிலிருக்கிற அத்தனை மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடியது இது’’ என்கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வி யாளருமான டாக்டர் ராஜம்மாள். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கான விதிமுறைகளை விளக்குகிறார்.

கற்கை நன்றே - 4 - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை!

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வருடத்துக்கு 1,000 ரூபாயும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு வருடத்துக்கு 3,000 ரூபாயும், 9-ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கிறவர்களுக்கு வருடத்துக்கு 4,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த உதவித்தொகை கல்லூரிப் படிப்பின்போதும் தொடரும். இளங்கலை படிப்பில் வருடத்துக்கு 6,000 ரூபாயும் முது கலை படிப்பில் வருடத்துக்கு 7 ரூபாயும் வழங்கப் படும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 40 சதவிகிதத்துக்கு மேல் உடல் குறைபாடு இருக்க வேண்டும். அதற்கும் கீழே குறைபாடு கொண்டவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்தியக் குடியுரிமை கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கிற மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கிற மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பெற்றோரின் வருமான சான்றிதழ் அவசியமில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக் கிற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ‘இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்பதற்கான உறுதிச் சான்றிதழை (Bonafide certificate) இணைத்து அனுப்ப வேண்டும். அடுத்தடுத்த கல்வி யாண்டுகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக் கான உதவித்தொகை தொடர வேண்டு மென்றால், ஒவ்வொரு வருடமும் பள்ளியி லிருந்து உறுதிச்சான்றிதழ் பெற்றுத்தந்து ஸ்காலர்ஷிப்பை புதுப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகையையும் பள்ளிக்கூடம் வழி யாகத்தான் பெற முடியும்.

இந்த ஸ்காலர்ஷிப், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானது என்பதால், இத்தனை சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால்தான் உதவித்தொகை கிடைக்கும் மற்றும் தொடரும் என்கிற நிபந்தனை 8-ம் வகுப்பு வரை கிடையாது. மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். அதேசமயம், 9-ம் வகுப்பி லிருந்து 40 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் தான் உதவித்தொகை கிடைக்கும். அது அடுத் தடுத்த வகுப்புகளுக்குத் தொடரவும் செய்யும்.

கற்கை நன்றே - 4 - மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை!

இந்த உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது, மத்திய மற்றும் மாநில அரசாங்கம் சார்ந்த வேறெந்த உதவித்தொகை களையும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் வாங்கக்கூடாது. அதே நேரம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையைவிட கூடுதலான தொகை கொண்ட வேறோர் உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான உதவித்தொகை வாங்குவதை நிறுத்திவிடுவதோடு, அதைப் புதுப் பிக்கவும் கூடாது. ஒரு பெற்றோரின் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். மூன்றாவது குழந்தை மாற்றுத்திறனாளி என்றாலும் வழங்கப்பட மாட்டாது.

உதவி செய்பவர்களுக்கும் உதவித் தொகை!

80 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட உடல் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் அல்லது உடன்பிறந்தோர் அல்லது உதவியாளர் ஒருவருக்கு மாதந்தோறும் ‘Escort Allowance’ ஆக 160 ரூபாய் வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு, படியில் ஏறியிறங்குவது போன்ற உதவிகளைச் செய்யும் ஒரு நபருக்கு மாதந் தோறும் ‘Helpers Allowance’ ஆக 160 ரூபாய் வழங்கப்படும். விழித்திறன் சவால் கொண்ட மாணவர்களுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டும் உதவியாளருக்கும் மாதந்தோறும் 160 ரூபாய் வழங்கப்படும். மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருபவருக்கு ‘Coaching Allowance’ ஆக ரூ.240 மாதந்தோறும் வழங்கப்படும். இந்தத் தொகை களைப் பெறுவதற்கு இவர்களும் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலு வலகத்தை அணுக வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க உதவி செய்யும் இந்த உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார் கல்வியாளர் ராஜம்மாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism