Published:Updated:

கற்கை நன்றே - 5 - மாணவிகளுக்கு மட்டுமேயான உதவித்தொகைகள்!

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

‘மாணவிகளுக்குச் சிறகுகளை வழங்கும் திட்டம்’ இது. இதில் மாணவிகளுக்கு உதவி செய்கிற பல திட்டங்கள் இருக்கின்றன.

கற்கை நன்றே - 5 - மாணவிகளுக்கு மட்டுமேயான உதவித்தொகைகள்!

‘மாணவிகளுக்குச் சிறகுகளை வழங்கும் திட்டம்’ இது. இதில் மாணவிகளுக்கு உதவி செய்கிற பல திட்டங்கள் இருக்கின்றன.

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

பொருளாதார பிரச்னை காரணமாக மாணவி களின் உயர்கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் சில உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் முக்கியமான சில உதவித்தொகைகள் பற்றி விளக்குகிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வியாளருமான டாக்டர் ராஜம்மாள்.

1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித்தொகை

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் என்பது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக தமிழக அரசால் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் அனைவரும், கண்டிப்பாக உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் பட்டப்படிப்புகள், டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும்போது, அந்த மாணவிகளின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். வரும் கல்வி யாண்டிலிருந்து (2022-23) இந்தத் திட்டம் செயல் பாட்டுக்கு வரவிருக்கிறது. மாணவிகள், தாங்கள் படிக்கும் கல்லூரிகள் மூலமாகவே விண்ணப்பிக்க லாம். மதிப்பெண்கள், சாதி, பெற்றோரின் ஆண்டு வருமானம் என்று எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இதற்குக் கிடையாது.

கற்கை நன்றே - 5 - மாணவிகளுக்கு மட்டுமேயான உதவித்தொகைகள்!

2. உடான் (Udaan) பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி

‘மாணவிகளுக்குச் சிறகுகளை வழங்கும் திட்டம்’ இது. இதில் மாணவிகளுக்கு உதவி செய்கிற பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, IIT, NIT போன்ற புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரி களில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்காக, அக்கல்லூரிகளின் நுழைவுத் தேர்வில் மாணவிகள் வெற்றிபெறும் வண்ணம் அவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுப்பது.

சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவிகளுக்கு மட்டுமேயானது இந்த இலவச பயிற்சி. பத்தாம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 70 சதவிகிதமும், அறிவியல் மற்றும் கணிதத்தில் மட்டும் தனித்தனியாக 80 சதவிகிதமும் மதிப்பெண் எடுத்த மாணவிகள் `உடான்' இலவச பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள், பொறியியல் படிப்பதற்கு ஏதுவாக ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களைப் படிக்க வேண்டும்.

இந்த மாணவிகள் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போதே பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்காக இரண்டு வருடப் பயிற்சியை இலவசமாக உடான் வழங்கும். இந்தப் பயிற்சி ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வழியிலும் நடைபெறும். இந்தியா முழுக்க 60 மையங்களில் இந்த இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டடி மெட்டீரியலும் இலவசமே. மாணவிகளுக்கு எந்த நகரத்தில், எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அதைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும். இந்த இலவச பயிற்சிக்குப் பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்க்கும் கீழே இருக்க வேண்டியது அவசியம்.

3. வித்யாதன் உதவித்தொகை

உடான் திட்டத்தின் கீழ் வரும் ‘வித்யாதன்' உதவித்தொகை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கானது. இது மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை. மாற்றுத்திறனாளி மாணவிகள் 50 சதவிகித மதிப்பெண்ணும், மற்ற மாணவிகள் 60 சதவிகித மதிப் பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படை யில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவில் வருடத்துக்கு 6,000 ரூபாய் வழங்கப் படும். அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு அவர் களின் உயர்படிப்பு வரைக்கும், தேர்ந்தெடுக்கும் படிப்பைப் பொருத்து வருடத்துக்கு 10,000 முதல் 60,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதைப் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் பெற் றோரின் வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

4. ஃபெடரல் பேங்க் ஹார்மிஸ் நினைவு அடித்தள உதவித்தொகை (Federal Bank Hormis Memorial Foundation Scholarship)

இதுவும் உடான் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு வழங்கப்படுவதே. மருத்துவம், பொறியியல், பி.எஸ்ஸி நர்சிங், வேளாண்மை, ஹானர்ஸ், கார்ப்பரேஷன் அண்ட் பேங்கிங், அக்ரிகல்ச்சர் சயின்ஸ் ஆகிய புரொஃபஷனல் டிகிரி படிக்கிற மாணவிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

கற்கை நன்றே - 5 - மாணவிகளுக்கு மட்டுமேயான உதவித்தொகைகள்!

மேற்குறிப்பிட்ட துறைகளுக்கேற்ப, அவற்றுக்கான நுழைவுத்தேர்வில் மெரிட்டில் தேர்ச்சிபெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணத்துக்கு, நீட் தேர்வில் மெரிட்டில் தேர்ச்சிபெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், நீட்டில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத் தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. தவிர, பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் கல்லூரியில் தரப்பட்ட அட்மிஷன் கடிதத்தின் நகல், குறிப்பிட்ட கல்லூரியில் அட்மிஷன் கிடைத்திருக்கிறது என்பதற்கான உறுதிச்சான்றிதழ் (Bonofide Certificate), எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்கான ஆதாரம், பெற்றோரின் வருமான சான்றிதழ் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும். படிப்பைப் பொருத்து வருடத்துக்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை கிடைக்கும்.

உடான் (Udaan) பொறியியல் நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி, வித்யாதன் உதவித்தொகை, ஃபெடரல் பேங்க் ஹார்மிஸ் நினைவு அடித்தள உதவித்தொகை மூன்றுக்குமே ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism