Published:Updated:

கற்கை நன்றே 7 - தொழிற்கல்வி, விளையாட்டு, கலைத்துறை... சாதிக்க விரும்பும் பெண்களுக்கான உதவித்தொகைகள்!

கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் களங்களில் பாலின சமத்துவத்தை உருவாக்கு வதே இந்த உதவித்தொகையின் நோக்கம்

கற்கை நன்றே 7 - தொழிற்கல்வி, விளையாட்டு, கலைத்துறை... சாதிக்க விரும்பும் பெண்களுக்கான உதவித்தொகைகள்!

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் களங்களில் பாலின சமத்துவத்தை உருவாக்கு வதே இந்த உதவித்தொகையின் நோக்கம்

Published:Updated:
கற்கை நன்றே
பிரீமியம் ஸ்டோரி
கற்கை நன்றே

உயர் கல்வியில் பாலின சமத்துவத்தை உருவாக்கவும், தொழிற்கல்வி, விளையாட்டு, கலை என எந்தத் துறையில் சாதிக்கவும், 50 வயதுக்கு மேலும் பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரவும் வழங்கப்படும் உதவித் தொகைகள் பற்றி சொல் கிறார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் கல்வி யாளருமான டாக்டர் ராஜம்மாள்.

 ராஜம்மாள்
ராஜம்மாள்

அடோப் ரிசர்ச் விமன் இன் டெக்னாலஜி ஸ்காலர்ஷிப் (Adobe Research Women-in-Technology Scholarship)

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் களங்களில் பாலின சமத்துவத்தை உருவாக்கு வதே இந்த உதவித்தொகையின் நோக்கம். அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் இளங்கலை மற்றும் முதுகலையில் கணினி அறிவியல், கணினி பொறியியல் அல்லது கணினித்துறை சார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளைப் படித்து வருகிற இந்திய மாணவி களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். வருடத் துக்கு 10,000 டாலர் (இந்திய மதிப் பில் கிட்டத்தட்ட 75,000 ரூபாய்) வழங்கப்படும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் மாணவி களுடைய சுய விவரம், கல்விச் சான்றுகள், படிக்கும் கல்லூரியின் மூன்று பேராசிரியர்களிடமிருந்து கடிதம், துறை சார்ந்த நான்கு கட்டுரைகள், தங்களுடைய கனவு வேலை பற்றிய 60 நொடி வீடியோ ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் உயர் கல்வி படிக்கிற அனைத்து மாணவிகளும் விண்ணப்பிக்க லாம். மெரிட் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். இது, `அடோப்' நிறுவனம் வழங்கு கிற உதவித்தொகை என்பதால், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கிற மாணவிகளின் நெருங்கிய உறவினர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்க்கக் கூடாது.

கற்கை நன்றே 7 - தொழிற்கல்வி, விளையாட்டு, கலைத்துறை...
சாதிக்க விரும்பும் பெண்களுக்கான உதவித்தொகைகள்!

பிரகதி ஸ்காலர்ஷிப் (AICTE Pragati Scholarship for Girls)

இந்த உதவித்தொகை இந்திய அரசால் வழங்கப்படுகிறது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் முதல் வருடம் டிகிரி, டிப்ளோமா படிக்கிற மாணவிகள் ஆன்லைனில் நவம்பர் மற்றும் டிசம்பரில் விண்ணப்பிக்கலாம். மெரிட் அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்படும் 4,000 மாணவிகளுக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக 30,000 ரூபாய் வரை வழங்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இன்டர்ன்ஷாலா உதவித்தொகை (Internshala Career Scholarship for Girls)

இந்த உதவித்தொகையையும் இந்திய அரசுதான் வழங்குகிறது. கல்வி, தொழிற்கல்வி, விளையாட்டு, கலை என எந்தத் துறையில் பெண்கள் சாதிக்க விரும்பினாலும் இந்த உதவித்தொகை கைகொடுக்கும். வருடத்துக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். 17 வயது முதல் 23 வயது வரை யிலான அனைத்து மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை (DST - Women Scientist Scheme B - WOS-B)

அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை வரை படித்துவிட்டு, அதன்பிறகு ஆராய்ச்சிப் படிப்பை முடிக்காமல் விட்ட பெண்கள், சில வருடங்கள் கழித்து ஆராய்ச்சிப் படிப்பை தொடர விரும்பினால், அவர்களுக்கு இந்த உதவித்தொகை கைகொடுக்கும். குறைந்தபட்சம் 27 வயது முதல் 57 வயது வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வயதில் ஐந்து வருடங்கள் விலக்கு உண்டு. மாதம்தோறும் 40,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இணைய வழியில் செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism