Published:Updated:

ஆன்லைன் வகுப்புகளை சிறப்பாக முறைப்படுத்த... பள்ளிகள் செய்ய வேண்டியவை!

பள்ளிகள் செய்ய வேண்டியவை!
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிகள் செய்ய வேண்டியவை!

நேரடி வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை ஆன்லைன் வகுப்பிலும் அப்படியே பின்பற்றுவது ஏற்கத் தக்கது அல்ல.

ஆன்லைன் வகுப்புகளை சிறப்பாக முறைப்படுத்த... பள்ளிகள் செய்ய வேண்டியவை!

நேரடி வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை ஆன்லைன் வகுப்பிலும் அப்படியே பின்பற்றுவது ஏற்கத் தக்கது அல்ல.

Published:Updated:
பள்ளிகள் செய்ய வேண்டியவை!
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிகள் செய்ய வேண்டியவை!

கொரோனா பெருந்தொற்றின் விளைவாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. நேரடியான வகுப்பு அனுபவத்தை ஆன்லைன் வகுப்புகள் ஈடு செய்ய முடியாது என்றாலும், தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளே மாற்றுவழி. இந்த ஆன்லைன் வகுப்புகளைத் திறம்பட நடத்த, பள்ளித் தரப்பில் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றலாம், எவ்வாறு முறைப் படுத்தலாம் என்பது குறித்து குழந்தைகள் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான விழியன் பகிரும் ஆலோசனைகள் இங்கே…

ப்ரி கேஜி முதல் 12-ம் வகுப்பு வரையில் இருக்கும் குழந்தைகள் ஆன்லைனில் படிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே தராசில் நிறுத்தி வகுப்புகளைக் கட்டமைக்கக் கூடாது. ஒவ்வொரு வயதினருக்குமான தேவைகளும் கவனமும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால், அதற்கு ஏற்றாற் போல வகுப்புகளைத் திட்டமிட வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளை சிறப்பாக முறைப்படுத்த... பள்ளிகள் செய்ய வேண்டியவை!

நேரடி வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை ஆன்லைன் வகுப்பிலும் அப்படியே பின்பற்றுவது ஏற்கத் தக்கது அல்ல. பாடங்களின் அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும்.

பாடப் புத்தகத்தில் இருப்பதை அப்படியே போதிக்காமல் கருத்துகள் (Concept) அடிப்படையில் வகுப்புகள் எடுக்கலாம். அதில் ஒரே வகுப்பு மாணவர்கள் மட்டுமே அமர வேண்டியதில்லை. உதாரணமாக, ‘அளவிடுதல்’ பாடத்தை 6 - 8-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து எடுக்கலாம்.

6-ம் வகுப்பில் இருந்து, அவ்வப்போது பாடங்களை மாணவர்களே வகுப்பில் எடுக்க ஊக்கப்படுத்தலாம். குறைந்தது 30 சதவிகித அளவுக்காவது மாணவர்கள் முயல வாய்ப்புக் கொடுக்க வேண்டும். சுழற்சி முறையில் அவர்களை பாடங்களை எடுக்கச் சொல்லலாம். விடுபட்ட புள்ளிகளை ஆசிரியர் நிரப்பி அந்த வகுப்பை நெறியாள்கை செய்யலாம். சக மாணவர்கள் வகுப்பு எடுக்கும் போது ஆசிரியர் - மாணவர் என்கிற இடைவெளி தகர்ந்து கூடுதலாகக் கவனிப்பார்கள். கேள்விகளைக் கேட்பார்கள். வகுப்பு எடுக்கும் குழந்தைகளும் அப்பொறுப்பின் விளைவாக ஆழமாகக் கற்பார்கள்.

தொடக்க நிலை வகுப்புகளுக்கு ஒரு வகுப்பில் அளவிலான மாணவர் கள் மட்டுமே இருக்கும்படி மாணவர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க வேண்டும். அப்போதுதான் பாடம் எடுத்த பிறகு, அதைக் குழந்தைகள் உள்வாங்கினார்களா என்பதை அவர்களின் முகத்தைப் பார்த்து ஆசிரியர் உறுதி செய்ய முடியும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அனைவரையும் அவரால் ஆழ்ந்து கவனிக்க முடியாத நிலையே ஏற்படும்.

ஆன்லைன் வகுப்புகளை சிறப்பாக முறைப்படுத்த... பள்ளிகள் செய்ய வேண்டியவை!

பெற்றோர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் பற்றிய கலந்துரையாடல் அவசியம். வாரத்துக்கு அரைமணி நேரம், ஆன்லைன் வகுப்பில் குழந்தைகளைக் கையாள்வதை ஒட்டியும், அவர்களை எப்படி வழிநடத்துவது என்றும் பள்ளி நிபுணர்களைக் கொண்டு பெற் றோருடன் உரையாடலாம். ஏனெ னில், வீட்டைவிட்டு வெளியே போகாத குழந்தைகளுக்கு உளவியல் சிக்கல்கள் கூடி இருக்கின்றன. இந்த நிலையில் அவர்களை முறையாகக் கையாள வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம்தான் இருக்கிறது.

வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு டேப், லேப்டாப் என அதற்குத் தேவையான உபகரணங்களை பள்ளியே வழங்க வேண்டும். கண்டிப்பாக இணைய வசதிக்கும் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். எப்படி வகுப்பு களை நிர்வகிக்க செலவு செய் வார்களோ, அதே போல ஆன்லைன் வகுப்புகளுக்கான செலவையும் பள்ளி நிர்வாகம் ஏற்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளின்போது, பள்ளிக் கட்டணம் கட்டாத மாணவர்களை ஹோல்டில் வைப்பது, ரிமூவ் செய்வது அல்லது அவர்களை உள்ளே நுழைய விடாமல் செய்வது போன்றவை குழந்தைகளின் மனதில் தாழ்வுநிலையை உண்டாக்கும். இது அவர்களின் கல்வியையும் மன நிலையையும் பாதிக்கும் என்பதால் இது போன்ற செயல்களைப் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது. பள்ளிக் கட்டணம் கட்டத் தவறிய பெற்றோர்களுடன் அது குறித்து ஆசிரியர்களை பேசச் சொல்லாமல், பள்ளி அலுவலகப் பணியாளர்களை பேசவைக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் தற்போது உருவாக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடைபெறுகின்றன எனப் பள்ளி மேலாண்மைக் குழு தெரிந்துகொள்ள வேண்டும். அதில் பெற்றோர்களுக்கு இருக்கும் சிக்கல்களையும், பள்ளி நிர்வாகத்துக்கு இருக்கும் இடர் களையும் இந்தக் குழுவிடம் பேசலாம். பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் என முத்தரப்புக்கும் இணக்கமான சூழல் உருவாக இந்த அமைப்பு தேவை.

6-ம் வகுப்பில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை ரெக்கார்டு செய்வதும், பள்ளி மேலாண்மை குழுவில் இருப்பவர்கள் ஆன்லைன் வகுப்பில் திடீர் விசிட் செய்வதும் சிறந்த கண்காணிப்புக்கும், ஆசிரியர்களின் அத்துமீறல்களைக் களையவும் உதவும்.

 விழியன்
விழியன்

தேர்வுகள் மீதான பார்வையை மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம். ஆன்லைன் வகுப்புகள் என்பதால் தேர்வு முறையையும் மதிப்பீட்டு முறையையும் மாற்ற வேண்டியது அவசியம். வகுப்புகளுக்கு ஏற்ப தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் என்பது எல்லோருக்குமே புதிய அனுபவம். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் வகுப்புகளில் செய்த பரிசோதனைகள் மற்றும் வெற்றிகளை ஆசிரியர்கள் தங்களுக்குள் பகிர வேண்டும்.

இது மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் எல்லோரையும் சென்று சேர ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டும். நன் முயற்சிகளை எல்லோரும் மேற் கொள்ள இது நல்ல மேடையாக அமையும். இப்பகிர்தல் பி.டி.எஃப் வடிவில் எழுத்தாகவோ, வீடியோ பதிவாகவோ அமையலாம். அது வலைதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism