Published:Updated:

UPSC தேர்வில் வெற்றி பெற்ற கிராமத்துக் கடைக்காரரின் மகன்; குவியும் பாராட்டுகள்!

2021-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மகாராஷ்டிர மாநிலம் ஹந்தர்குலி கிராமத்தில் வசித்துவரும் கடைக்காரரின் மகனான ரமேஷ்வர் சுதாகர் சப்பன்வாட், 202-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவதென்பது பலருக்கும் பெருங்கனவாக இருக்கும். இந்தக் கனவை நனவாக்க சம்பந்தப்பட்டவரின் கடும் உழைப்பைத் தாண்டி, குடும்பத்தாரின் உதவியும் ஆதரவும் முக்கியம். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கனவை நனவாக்க கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Exams
Exams

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மகாராஷ்டிர மாநிலம் ஹந்தர்குலி கிராமம், லத்தூரில் உள்ள உட்கிர் தாலுகாவில் வசித்துவரும் கடைக்காரரின் மகனான ரமேஷ்வர் சுதாகர் சப்பன்வாட், 202-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

புனேவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தனது இரண்டாவது முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 685 நபர்களில் 508 பேர் ஆண்கள், 177 பேர் பெண்கள். கிராமத்துக் கடைக்காரரின் மகனான ரமேஷ்வர், பல சவால்களைக் கடந்து இதில் தேர்ச்சி பெற்றதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism