Published:Updated:

அமேசான் நிறுவனத்தில் ₹1 கோடி சம்பளம்; அசத்திய எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்!

Amazon ( AP Photo/Michel Spingler )

``தற்போது அமேசான் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர், கணினி அல்லாத வேறு துறையில் படித்தாலும், உலகளவில் பல சாதனைகளை செய்தே, நிறுவனம் எதிர்பார்க்கும் வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்."

அமேசான் நிறுவனத்தில் ₹1 கோடி சம்பளம்; அசத்திய எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்!

``தற்போது அமேசான் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர், கணினி அல்லாத வேறு துறையில் படித்தாலும், உலகளவில் பல சாதனைகளை செய்தே, நிறுவனம் எதிர்பார்க்கும் வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்."

Published:Updated:
Amazon ( AP Photo/Michel Spingler )

2021 - 2022 -ம் ஆண்டுக்கான எஸ். ஆர். எம் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்க்காணல் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த நேர்காணலில் மாணவர் ஒருவருக்கு அமேசான் நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமேசானில் தங்கள் கல்லூரியில் படித்த மாணவனுக்கு வேலை கிடைத்ததை எண்ணி கல்லூரி ஆசிரியர்களும், நிர்வாகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து எஸ். ஆர். எம் கல்லூரியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறுகையில், ``ஆண்டுதோறும் நிறுவன நேர்க்காணலின் போது 7,000 - 8,000 பேருக்கு வேலை கிடைக்கும், தற்போது 10,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Amazon
Amazon
AP Photo/Michel Spingler

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது அமேசான் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர், கணினி அல்லாத வேறு துறையில் படித்தாலும், உலகளவில் பல சாதனைகளை செய்தே, நிறுவனம் எதிர்பார்க்கும் வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே தனியார் துறையில் தகுதியான நபர்களை பணியமர்த்துவதன் மூலம் எஸ். ஆர். எம் சமூகத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது" என குறிப்பிட்டு பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism