Published:Updated:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகள் - கல்வித் தகுதி மற்றும் விண்ணப்ப விவரங்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளாக மொத்தம் 28 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்கல்லூரிகளில் மூன்று கல்லூரிகள் சிறுபான்மையினர் கல்லூரிகளாக இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Agricultural University) கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மைக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் வேளாண்மை அறிவியல் பட்டப்படிப்புகள் (Agricultural Science Programmes) மற்றும் வேளாண்மைத் தொழில்நுட்பப் படிப்புகள் (Agricultural Technology Programmes) என்று மொத்தம் 11 வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) கீழ் இயங்கும் 'தேசிய நிறுவனத் தரவரிசை கட்டமைப்பு” (NIRF) வெளியிட்டுள்ள தரவரிசையில் மாநில வேளாண் பல்கலைக்கழகங்களின் பிரிவின் கீழ் இரண்டாவது இடத்தையும், 'அனைத்துப் பல்கலைக்கழகங்கள்' பிரிவின் கீழ் நாற்பத்து நான்காவது (44) இடத்தையும், 'ஒட்டுமொத்த'க் கல்வி நிறுவனங்கள் பிரிவின் கீழ் அறுபத்து எட்டாவது (68) இடத்தையும், QS-BRICS தரவரிசையில் நூற்றி ஐந்தாவது (105) இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக கோயம்புத்தூர், மதுரை, கிள்ளிகுளம் (தூத்துக்குடி மாவட்டம்), நவலூர் குட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்), வாழவச்சனூர் (திருவண்ணாமலை மாவட்டம்), குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்), ஈச்சங்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகிய 7 இடங்களில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Agricultural College and Research Institute), கோயம்புத்தூர், பெரியகுளம் (தேனி மாவட்டம்), நவலூர் குட்டப்பட்டு (திருச்சி மாவட்டம் – பெண்கள் கல்லூரி) ஆகிய 3 இடங்களில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Horticultural College and Research Institute), கோயம்புத்தூர், குமுளூர் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ஆகிய 2 இடங்களில் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Agricultural College and Research Institute), மேட்டுப்பாளையத்தில் வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் (Forest College and Research Institute), மதுரையில் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனமும் (Community Science College and Research Institute) என்று மொத்தம் 14 வேளாண்மைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் கோயம்புத்தூர் – 99, மதுரை – 119, கிள்ளிகுளம் (தூத்துக்குடி மாவட்டம்) – 101, நவலூர் குட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) - 101, வாழவச்சனூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 70, குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 90, ஈச்சங்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) – 70 என்று மொத்தம் 650 இளமறிவியல் (மேதமை) வேளாண்மை பட்டப்படிப்பு (B.Sc (Hons) Agriculture) இடங்கள் இருக்கின்றன.

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் கோயம்புத்தூர் – 50, பெரியகுளம் – 90, நவலூர் குட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்) பெண்கள் கல்லூரி – 55 என்று மொத்தம் 195 இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலைப் பட்டப்படிப்பு (B.Sc (Hons) Horticulture) இடங்கள் இருக்கின்றன.

தோட்டக்கலை
தோட்டக்கலை

மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 45 இளமறிவியல் (மேதமை) வனவியல் (B.Sc (Hons) Forestry) பட்டப்படிப்பு இடங்களும், 30 இளமறிவியல் (மேதமை) பட்டு வளர்ப்பு (B.Sc (Hons) Sericulture) பட்டப்படிப்பு இடங்களும் இருக்கின்றன.

இவை தவிர, மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் (B.Sc (Hons) Food, Nutrition and Dietetics) பட்டப்படிப்பு 45 இடங்களும், கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 45 இளமறிவியல் (மேதமை) வேளாண் வணிக மேலாண்மை (B.Sc. (Hons.) Agri Business Management) இடங்களும் இருக்கின்றன.

இக்கல்லூரிகளில் ஆறு வகையான இளம் அறிவியல் (மேதமை) பட்டப்படிப்புகளில் மொத்தம் 1010 இடங்கள் இருக்கின்றன.
வேளாண்மை
வேளாண்மை

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் கோயம்புத்தூர் – 40, குமுளூர் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) – 70 என்று மொத்தம் 110 இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்) (B.Tech - Agricultural Engineering) இடங்கள் இருக்கின்றன. கோயம்புத்தூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 55 இளம் தொழில்நுட்பம் (உணவுத் தொழில்நுட்பம்) (B.Tech – Food Technology) இடங்களும், இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்) (B.Tech. Energy and Environmental Engineering) 55 இடங்களும் இருக்கின்றன. கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 55 இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்) (B.Tech. Energy and Environmental Engineering) இடங்களும் என்று மொத்தம் 275 இளம் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு இடங்கள் இருக்கின்றன.

மேற்காணும் இடங்கள் தவிர, வெளிநாடு வாழ் இந்தியர் (NRI), இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ICAR), தொழிற்துறை (Industrial), அந்தமான் - நிக்கோபர், ஜம்மு காஷ்மிர், வெளிநாட்டினர் என்று சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களும் தனியாக இருக்கின்றன.
Geology படிப்பு பற்றியும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூற முடியுமா? | Doubt of Common Man

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இணைப்புக் கல்லூரிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளாக மொத்தம் 28 கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்கல்லூரிகளில் மூன்று கல்லூரிகள் சிறுபான்மையினர் கல்லூரிகளாக இருக்கின்றன. இணைப்புக் கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடங்களில் 65 சதவிகித இடங்களைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35 சதவிகித இடங்களைக் கல்லூரி நிர்வாகங்களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகவும் கொண்டு நிரப்பிக் கொள்ளும். சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 50 சதவிகித இடங்களைக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகவும் நிரப்பிக் கொள்ளும்.

கல்வி மற்றும் வயதுத் தகுதிகள்

பட்டு வளர்ப்பு
பட்டு வளர்ப்பு

இளமறிவியல் (மேதமை) வேளாண்மை / தோட்டக்கலை / வனவியல் / பட்டு வளர்ப்பு / வேளாண் வணிக மேலாண்மை (B.Sc - Agriculture / Horticulture / Forestry / Sericulture / Agri Business Management) மற்றும் இளம் தொழில்நுட்பம் (B.Tech - Bio Technology) பட்டப் படிப்புகளுக்கு 10+2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் / நுண்ணுயிரியல் / உயிர்வேதியியல் / கணினி அறிவியல் / மனையியல் பாடங்களில் ஏதாவது ஒன்று அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் பட்டப்படிப்பிற்கு, 10+2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் / நுண்ணுயிரியல் / உயிர்வேதியியல் / கணினி அறிவியல் / மனையியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் பாடங்களில் ஏதாவது ஒன்று அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்) / உணவுத் தொழில்நுட்பம் / ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு 10+2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் மேற்காணும் நான்கு பாடங்களிலும் சேர்த்து 55% மதிப்பெண்களும், பிற்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் பிற்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்) (BC(M)) 50% மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) 45% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – அருந்ததியர் (SCA) மற்றும் பழங்குடியினர் (ST) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் இரு அமர்வுகளுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மூன்று அமர்வுகளுக்குள்ளும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பிற பிரிவினர்களுக்கு 1-7-2021 அன்று 21 வயது நிரம்பியிருக்கக் கூடாது.
தொல்லியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு படிக்கலாமா, தகுதிகள் என்ன? | Doubt of Common Man

இட ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 18 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 பல்கலைக்கழக இணைப்பு பெற்ற சுயநிதிக் கல்லூரிகளில் பொதுப்பிரிவு – 31%, பிற்படுத்தப்பட்டோர் – 26.5%, பிற்படுத்தப்பட்டோர் (இசுலாமியர்) – 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் – 20%, ஆதிதிராவிடர் – 15%, ஆதிதிராவிடர் (அருந்ததியர்) – 3.0%, பழங்குடியினர் – 1% எனும் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

விண்ணப்பம்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தின் https://tnau.ac.in/ugadmission/ இணையதளத்திற்குச் சென்று இணையம் வழியில் (Online Application) விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300/-, பிற பிரிவினர்கள் ரூ.600/- என்று இணைய வழியிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 7-10-2021.
வேளாண் பல்கலைக்கழகம்
வேளாண் பல்கலைக்கழகம்

மாணவர் சேர்க்கை

விண்ணப்பித்தவர்களில் 10+2 தேர்வில் மேற்காணும் பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 18-10-2021 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு, வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் தவிர்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு (Affiliated to Tamilnadu Agricultural University) பெற்றுச் செயல்பட்டு வரும் 28 சுயநிதி வேளாண்மைக் கல்லூரிகளிலிருக்கும் வேளாண்மை (Agriculture) மற்றும் தோட்டக்கலை (Horticulture) போன்ற இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான (B.Sc.,) அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் கலந்தாய்வில் பெற முடியும்.

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகளில் சேர்வதற்கான மேலும் கூடுதல் தகவல்களை அறிய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தைப் பார்க்கலாம். பல்கலைக்கழகத்தின் 0422 – 6611345, 6611346 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது ugadmissions@tnau.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு