Published:Updated:

டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் பட்டதாரி பள்ளி சேர்க்கை நுழைவுத்தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எம்.எஸ்சி மற்றும் பி.எச்டி சேர்க்கை
எம்.எஸ்சி மற்றும் பி.எச்டி சேர்க்கை ( pixabay )

டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் எம்.எஸ்சி., பி.எச்டி, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி மற்றும் பி.எச்டி சேர்க்கைக்கான பட்டதாரி பள்ளி சேர்க்கை (GS-2022) நுழைவுத்தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (Tata Institute of Fundamental Research) இடம் பெற்றிருக்கும் அடிப்படை அறிவியல் பாடங்களில் முதுநிலை அறிவியல் (M.Sc), ஒருங்கிணைந்த முனைவர் (Integrated M.Sc, Ph.D) மற்றும் முனைவர் (Ph.D) பட்டப்படிப்புகளில் 2022 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பட்டதாரி பள்ளி சேர்க்கை (Graduate School Admissions - GS-2022) நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பள்ளிகள் மற்றும் மையங்கள்

அடிப்படை அறிவியலில் இந்தியாவின் மேம்பட்ட முதன்மை நிறுவனமாக இருந்து வரும் டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) மும்பை வளாகத்தில் கணிதம் (Mathematics), இயற்கை அறிவியல் (Natural Sciences), தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் (Technology and Computer Science) எனும் துறைகளிலான பட்டதாரிப் பள்ளிகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் கீழாக, பெங்களூருவில் பயன்படும் கணக்கியல் மையம் (Centre for Applicable Mathematics), பன்னாட்டுக் கோட்பாட்டு அறிவியல் மையம் (International Centre for Theoretical Sciences), தேசிய உயிரியல் அறிவியல் மையம் (National Centre for Biological Sciences) எனும் மூன்று தேசிய மையங்களும், ஹைதராபாத்தில் பல்துறை அறிவியல் மையம் (Centre for Interdisciplinary Sciences), மும்பையில் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education), புனேயில் தேசிய வானொலி வானியற்பியல் மையம் (National Centre for Radio Astrophysics) எனும் மையங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research)
டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research)

படிப்புகள்

டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) மற்றும் கணினி மற்றும் அமைப்பு அறிவியல் (Computer & Systems Sciences) பாடங்களில் உள்ள படிப்புகள் குறித்தத் தகவல்கள் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education)
ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education)

கணிதம்

மும்பை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் கணிதப் பள்ளி மற்றும் பெங்களூர் பயன்படும் கணக்கியல் மையம் ஆகியவற்றில் கணிதம் பாடத்திலான முனைவர் (Ph.D), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் (Integrated M.Sc Ph.D) பட்டப்படிப்புகளும், பெங்களூர் பன்னாட்டுக் கோட்பாட்டு அறிவியல் மையத்தில் கணிதம் பாடத்திலான முனைவர் (Ph.D) பட்டப்படிப்பும் இடம் பெற்றிருக்கின்றன.

இயற்பியல்

மும்பை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் இடம் பெற்றிருக்கும் வானியல் மற்றும் வானியற்பியல் துறை (Department of Astronomy & Astrophysics), சுருங்கிய பொருள் இயற்பியல் மற்றும் பொருள் இயற்பியல் துறை (Department of Condensed Matter Physics & Materials Science), உயர் ஆற்றல் இயற்பியல் துறை (Department of High Energy Physics), அணு மற்றும் அணு இயற்பியல் துறை (Department of Nuclear & Atomic Physics), கோட்பாட்டு இயற்பியல் துறை (Department of Theoretical Physics) ஆகியவற்றிலும், புனே தேசிய வானொலி வானியற்பியல் மையம், ஹைதராபாத் பல்துறை அறிவியல் மையம் மற்றும் பெங்களூர் பன்னாட்டுக் கோட்பாட்டு அறிவியல் மையம் ஆகியவற்றில் இயற்பியல் பாடத்திலான முனைவர் (Ph.D), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் (Integrated M.Sc Ph.D) பட்டப்படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இயற்பியலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்தியாவைத் தளமாகக் கொண்ட நியூட்ரினோ பட்டதாரி பயிற்சித் திட்டத்திற்குப் பரிசீலிக்கும் திட்டமுள்ளதால், விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் போது, இந்த விருப்பத்தையும் சேர்த்துப் பதிவு செய்து கொள்ளலாம்.

வானியல் மற்றும் வானியற்பியல் துறை (Department of Astronomy & Astrophysics)
வானியல் மற்றும் வானியற்பியல் துறை (Department of Astronomy & Astrophysics)

வேதியியல்

மும்பை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் வேதியியல் துறை மற்றும் ஹைதராபாத் பல்துறை அறிவியல் மையம் ஆகியவற்றில் வேதியியல் பாடத்திலான முனைவர் (Ph.D), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் (Integrated M.Sc Ph.D) பட்டப்படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

உயிரியல்

மும்பை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் உயிரியல் அறிவியல் துறையில் முதுநிலை உயிரியல் (M.Sc – Biology), பெங்களூர் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் முதுநிலை வனவிலங்கு உயிரியல் மற்றும் பாதுகாப்பு (M.Sc – Wildlife Biology & Conservation) படிப்புகளும், மேற்காணும் இரு மையங்களிலும், ஹைதராபாத் பல்துறை அறிவியல் மையத்திலும் உயிரியல் பாடத்திலான முனைவர் (Ph.D), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் (Integrated M.Sc Ph.D) பட்டப்படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணினி மற்றும் அமைப்பு அறிவியல்

மும்பை டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறையில் கணினி மற்றும் அமைப்பு அறிவியல் பாடத்திலான முனைவர் (Ph.D), ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் (Integrated M.Sc Ph.D) பட்டப்படிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

அறிவியல் கல்வி

மும்பை ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் அறிவியல் கல்வி பாடத்திலான முனைவர் (Ph.D) பட்டப்படிப்பு இடம் பெற்றிருக்கிறது.

கல்வித்தகுதி

மேற்காணும் பள்ளிகளிலும், மையங்களிலும் இடம் பெற்றிருக்கும் கீழ்க்காணும் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்குக் கீழ்க்காணும் கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
கல்வித்தகுதி

விண்ணப்பப் படிவம்

மேற்காணும் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பட்டதாரி பள்ளி சேர்க்கை (Graduate School Admissions GS-2022) நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் http://univ.tifr.res.in/gs2022/ எனும் முகவரியிலான இணையப் பக்கதிற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் ரூ.1200/-, பெண்கள் ரூ.600/-, மற்றவர்கள் ரூ.600/- என்று மின் பணப் பரிமாற்ற முறையில் (online) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

நிதி நெருக்கடியின் அடிப்படையில், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இயலாதவர்கள், கட்டணத் தள்ளுபடி வேண்டுபவர்கள் பதிவின் போது, கட்டண விலக்கு விருப்பத்தைத் தேர்வு செய்து கொள்வதுடன், கடைசியாகப் பயின்ற கல்லூரி முதல்வர் / துறைத்தலைவர் கடிதத் தலைப்பில் பரிந்துரைக் கடிதம் பெற்று, விண்ணப்பக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்யக் கோரலாம். கடிதத்தில் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரை உறுதியாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10-11-2021
நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு

நுழைவுத்தேர்வு

இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உட்பட இந்தியா முழுவதும் 38 இடங்களில் பட்டதாரி பள்ளி சேர்க்கைக்கான (Graduate School Admissions GS-2022) நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை (Hall Ticket) 22-11-2021 முதல் http://univ.tifr.res.in/gs2022/ எனும் முகவரியிலான இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு, அனைத்து மையங்களிலும் 12-12-2021 அன்று தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும். நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களுக்கான பட்டியல் ஆகியவை டிசம்பர் மாத இறுதிக்குள் மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை

மேற்காணும் பாடங்களில் அறிவியல் கல்வி தவிர்த்த அனைத்து பாடங்களிலுமான மாணவர் சேர்க்கைக்கு, நேர்காணல் மற்றும் / அல்லது இரண்டாவது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பாடங்களுக்கேற்ற வகையில் நடத்தப்பெறலாம். அதன் பிறகு, பட்டியலிடப்பட்ட மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிக்கப்படும். 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்புகள் தொடங்கும்

கூடுதல் தகவல்கள்

இப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் போன்ற கூடுதல் தகவல்களை அறிய http://univ.tifr.res.in/gs2022/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

கணிதம் / இயற்பியல் / வேதியியல் / கணினி மற்றும் அமைப்பு அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ”University Cell, Tata Institute of Fundamental Research, Homi Bhabha Road, Colaba, Mumbai - 400005” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 022 – 22782629 / 2114 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அறியலாம்.

உயிரியல் பிரிவுக்கு ”Admissions Section, National Centre for Biological Sciences, UAS -GKVK Campus, Bellary Road, Bangalore - 560065” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 080 – 23666404 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அறியலாம்.

அறிவியல் கல்விப் பிரிவுக்கு “Homi Bhabha Centre for Science Education, Tata Institute of Fundamental Research, V.N. Purav Marg, Mankhurd, Mumbai - 400088” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 022-25580036 / 25567711 / 25554712 / 25555242 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ பெறலாம்.

மின்சாரப் பணிகளைச் செய்வதற்கான மின் உரிமத்தை எப்படிப் பெறுவது? | Doubt of Common Man

தொடர்புச் செய்தி

உயிரியல் மற்றும் பல்துறை அறிவியல் பட்டதாரிப் படிப்புகளுக்கான இணை நுழைவுத் தேர்வு

டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனம் (Tata Institute of Fundamental Research) நடத்தும் உயிரியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, இந்தியாவிலுள்ள சில உயிரியல் தொடர்புடைய படிப்புகளைக் கொண்டிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான உயிரியல் மற்றும் பல்துறை அறிவியல் பட்டதாரிப் படிப்புகளுக்கான இணை நுழைவுத் தேர்வு (Joint Graduate Entrance Examination for Biology and Interdisciplinary Life Sciences (JGEEBILS)) என்றும் அழைக்கப்படுகிறது.
அறிவியல்
அறிவியல்

போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Science Education and Research (IISER)), ஹைதராபாத்திலிருக்கும் கண் அறைகளாலான மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad), ஹைதராபாத்திலிருக்கும் டிஎன்ஏ தடயவியல் மற்றும் நோய்நாடல் இயல் மையம் (Centre for DNA Fingerprinting and Diagnostics, Hyderabad), மானேசரிலிருக்கும் தேசிய மூளை ஆய்வியல் மையம் (National Brain Research Centre, Manesar), பெங்களூருவிலிருக்கும் தேசிய உயிரியல் அறிவியம் மையம் (National Centre for Biological Sciences, Bengaluru), புதுடெல்லியிலிருக்கும் தேசியத் தடுப்பாற்றலியல் நிறுவனம் (National Institute of Immunology, New Delhi), பெங்களூருவிலிருக்கும் முதல்நிலை உயிரணு உயிரியல் மற்றும் மீளாக்க மருத்துவ நிறுவனம் (Institute for Stem Cell Biology and Regenerative Medicine, Bangalore), புனேயிலிருக்கும் தேசிய உயிரணு அறிவியல் மையம் (National Centre for Cell Science, Pune), மும்பையிலிருக்கும் புற்றுநோய்க்கான கூடுதல் சிகிச்சை, ஆய்வு மற்றும் கல்வி நிறுவனம் (Advanced Centre for Treatment, Research and Education in Cancer (ACTREC), Mumbai), புபனேஸ்வரிலிருக்கும் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (National Institute of Science Education and Research, Bhubaneshwar), பாரிதாபாத்திலிருக்கும் மண்டல உயிர்த்தொழில்நுட்ப மையம் (Regional Centre for Biotechnology, Faridabad), சென்னையிலிருக்கும் கணித அறிவியல் நிறுவனம் (Institute of Mathematical Sciences, Chennai), மணிபால் உயர் கல்வி நிறுவனத்தின் மணிபால் அறிவியல் பள்ளி (Manipal School of Life Sciences, Manipal Academy of Higher Education, Manipal), கொல்கத்தாவிலிருக்கும் சகா அணு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics), அசோகா பல்கலைக்கழகம் (Ashoka University), கொல்கத்தாவிலிருக்கும் போஸ் நிறுவனம் (Bose Institute, Kolkata) போன்ற கல்வி நிறுவனங்கள், தங்கள் நிறுவன மாணவர் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வையே தகுதித் தேர்வாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், இக்கல்வி நிறுவனச் சேர்க்கைக்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவிகளுக்குப் பிரகதி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி?

GATE மாணவர்கள் சேர்க்கை

டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Tata Institute of Fundamental Research) கணினி மற்றும் அமைப்பு அறிவியல் (Computer & Systems Sciences) படிப்பில் முனைவர் பட்டத்திற்கு இந்நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு தவிர, பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering – GATE) மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான தனி அறிவிப்பு 31-1-2022 அன்று இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். 2020, 2021, 2022 ஆகிய மூன்றாண்டுகளில் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு – 2022 முடிவுகள் இணையத்தில் வெளியான நாளிலிருந்து இரண்டு வார கால முடிவுக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு