Published:Updated:

`ரிலாக்ஸ்டா படிச்சேன்; இப்ப 43-வது ரேங்க் வாங்கிட்டேன்!' - நீட் தேர்வில் அசத்திய அரவிந்த்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தன் குடும்பத்தினருடன் அரவிந்த்
தன் குடும்பத்தினருடன் அரவிந்த்

``நீட் தேர்வுக்கு வீட்டுல இருந்தபடியே தயாரானேன். என்னால நிச்சயம் சாதிக்க முடியும்னு நம்பினேன். இந்திய அளவுல 15 லட்சம் பேருக்கு மேல் இந்தத் தேர்வை எழுதினாங்க. 720-க்கு 710 மார்க் வாங்கி 43-வது ரேங்க் வாங்கியிருக்கேன்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் மாணவர் அரவிந்த்.

`நீட்' தேர்வு என்றாலே, தொடர்ந்து கோச்சிங் சென்டர் என்பதும் சேர்த்தேதான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு இந்த இரண்டும் பின்னிப் பிணைந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில், கோச்சிங் சென்டர் செல்லாமலும் `நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என மற்ற மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகத் தஞ்சையைச் சேர்ந்த மாணவர் அரவிந்த், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு, அகில இந்திய அளவில் 43-வது ரேங்க் எடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வெற்றிக்கு இவரின் பெற்றோரின் தனித்துவமான அணுகுமுறையும் காரணமாக இருந்தது சிறப்பு.

மாணவர் அரவிந்த்
மாணவர் அரவிந்த்

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ரமணி நகரில் வசித்து வரும் தம்பதி வேலாம்பாள் - ரவிச்சந்திரன். வேலாம்பாள் எல்.ஐ.சி-யிலும், ரவிச்சந்திரன் தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் மகன் அரவிந்த், நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

``நீ படிச்சு என்னவாகப் போறனு யாராவது கேட்டா, சின்ன வயசுல பெரும்பாலான பசங்க டாக்டர் ஆகப்போறேனுதான் சொல்லுவாங்க. ஆனா, நான் அந்த மாதிரி எல்லாம் சொன்னதில்ல. ஆரம்பத்துல எனக்கு மருத்துவராகணும் என்ற எண்ணம் எல்லாம் இருந்ததில்ல. என் பெற்றோரும்கூட, `நீ டாக்டராகணும்'னு சொன்னதில்ல'' என்று பேச ஆரம்பித்தார் அரவிந்த்.

``எனக்கு வீசிங் டிரபிள் வந்தப்பவும், வேற சில சூழல்கள்லயும் மருத்துவமனைகளுக்கு போனப்போ மருத்துவர்கள் மேல மரியாதை அதிகரிச்சுட்டேபோனது. உடல் தொந்தரவுகளோடு வரக்கூடியவங்களுக்கு அடுத்த கொஞ்ச நேரத்துலயே டாக்டர்ஸ் அவஸ்தை நீக்கி நிம்மதியைத் தருவாங்க. நாமளும் அப்படி ஒரு டாக்டர் ஆகணும்னு என்ற எண்ணம் எனக்குள்ள படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது, நீட் எக்ஸாம் எழுதணும்னு முடிவெடுத்தேன். `உனக்கு எது விருப்பமோ, அதைச் செய். ஆனா, இது கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கு. அதுக்காக நீ வருத்தப்படக் கூடாது. வாழ்க்கையில் சந்தோஷமா வாழ, இன்னும் எவ்வளவோ படிப்புகள் இருக்கு’னு சொல்லி என் பெற்றோர் என் மனசை பக்குவப்படுத்தினாங்க. எந்த விதத்துலயும் எனக்கு எந்த ஒரு பிரஷரும் கொடுத்ததில்ல.

தன் குடும்பத்தினருடன் அரவிந்த்
தன் குடும்பத்தினருடன் அரவிந்த்
நீட் தேர்வில் வென்ற கோவை பழங்குடி மாணவி; சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த கண்ணீர்க் கதை!

நான் படிச்ச ஸ்கூல்லயும் அப்படித்தான். அதிகமா மார்க் எடுத்தா பாராட்டி ஊக்கப்படுத்துவாங்க. ஆனா அதே நேரம், மார்க்கை நோக்கி மாணவர்களை வதைக்க மாட்டங்க. நான் விருப்பப்பட்டு படிச்சு, நீட் தேர்வுக்கு வீட்டுல இருந்தபடியே தயாரானேன். என்னால நிச்சயம் சாதிக்க முடியும்னு நம்பினேன். இந்திய அளவுல 15 லட்சம் பேருக்கு மேல் இந்தத் தேர்வை எழுதினாங்க. 720-க்கு 710 மார்க் வாங்கி 43-வது ரேங்க் வாங்கியிருக்கேன்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் மாணவர் அரவிந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசினர் அரவிந்தின் பெற்றோர். ``பத்தாம் வகுப்பு வரைக்குமே அவன் வீட்ல புத்தகத்தை எடுத்துப் படிச்சதே இல்ல. ஸ்கூல்ல ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்குறதை உள்வாங்கியே எக்ஸாம் எழுதி, டாப்பரா வந்துடுவான். நீட் தேர்வு எழுதணும்ங்கற எண்ணத்தை அவன் எங்ககிட்ட சொன்னப்போ, பிரபல கோச்சிங் சென்டர்ல அவனை சேரச் சொன்னோம். ஆனா மறுத்துட்டான். வீட்டுல இருந்தபடியே ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சு, மாதிரி டெஸ்ட் எழுதிப் பார்த்துட்டே இருப்பான். ஆனாலும் ரிலாக்ஸ்டாதான் இருப்பான்.

அரசுப்பள்ளி டு ஐ.ஐ.டி: கூலி வேலை செய்யும் குடும்பம்; வறுமையிலும் சாதித்த அருண் குமாரின் கதை!

படிப்புக்கு இடையில அப்பப்போ யூடியூப்ல பொழுதுபோக்கு வீடியோக்கள் பார்ப்பான். தினமும் இத்தனை மணியில இருந்து இத்தனை மணி வரைக்கும் படிக்கணும்னு அட்டவணை போட்டெல்லாம் படிக்க மாட்டான். தனக்கு எப்ப தோணுதோ அப்ப மட்டும்தான் படிப்பான். ராத்திரி ஒரு மணி வரைக்கும் படிச்சிட்டு, காலையில 10 மணிக்குத்தான் எழுந்திரிப்பான். அவன் விருப்பத்துக்கு அவனை சுதந்திரமா விட்டோம். சாதனை வெற்றி இப்போ சந்தோஷமா இருக்கு'' என்றவர்கள்,

``அகில இந்திய அளவுல 50 ரேங்க் உள்ள வாங்கினவங்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில நிச்சயமா சீட் கிடைக்கும். `ஆனா அது வேண்டாம்... தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்லதான் படிப்பேன். எங்க படிச்சா என்னா, நமக்குத் திறமை இருந்தா கண்டிப்பா சாதிக்கலாம்'னு சொல்றான்’’ என்றார்கள் பெருமையுடன்.

வாழ்த்துகள் அரவிந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு