Published:Updated:

17 வயதில் 4 பட்டம், 13 வயதில் 3 இணை பட்டம் - அசத்தும் அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகள்!

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

பள்ளி படிக்கும்போதே பட்டங்களைப் பெற்ற அண்ணன், தங்கை - அசத்தும் அமெரிக்க வாழ் தமிழ் குடும்பம்!

கல்யாண் குடும்பத்தினர்
கல்யாண் குடும்பத்தினர் ( நந்தகுமார் )

இன்றைய மாணவர்களிடையே இணையம் அதிகளவு ஆதிக்கம் செலுத்துகிறது. இதில், பலரும் தேவையற்ற விஷயங்களில் மூழ்கிக்கிடக்க, சிலர் மட்டும் இணையத்தை நல்வழியில் பயன்படுத்தி சாதித்துக் காட்டுகின்றனர்.

பிரணவ், ஸ்ரீயா
பிரணவ், ஸ்ரீயா
நந்தகுமார்

டிஜிட்டல் யுகத்தில் இன்டர்நெட், ஆண்ட்ராய்டு மொபைல் போன் எனப் பல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திசைமாறி வாழ்க்கையைத் தொலைக்கும் சிறுவர்கள் மத்தியில், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கிறார்கள் அமெரிக்க வாழ் தமிழரான கல்யாண் குமார் குடும்பத்தினர்.

மகன் பிரணவ் 17 வயதில் 4 இணை பட்டமும், மகள் ஸ்ரீயா 13 வயதில் 3 இணை பட்டமும் பெற்றிருப்பதோடு, 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு எடுத்துவருகிறார்கள்.

கல்யாண் குடும்பத்தினர்
கல்யாண் குடும்பத்தினர்
நந்தகுமார்

அமெரிக்க அரசின் நன்மதிப்பை பெற்றிருக்கிற கல்யாண் குமாரின் சொந்த ஊர் மதுரை. விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவரோடு பேசினேன்.

''எங்களுக்கு சொந்த ஊர் மதுரை பாலமேடுதான். கணிப்பொறி துறையில் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு மென்பொருள் பொறியாளராகக் கோவையில் சில ஆண்டுகள் பணி செய்தேன். பின்னர் மலேசியா செல்ல வாய்ப்பு கிடைத்து.

கல்யாண்
கல்யாண்
நந்தகுமார்

அதன் பின்னர், தொடர்ந்து 20 ஆண்டுகளாக அமெரிக்காவில்தான் குடும்பத்தோடு வசித்துவருகிறேன். என் மகன் பிரணவ் அவனுடைய 9 வயதில், கணினி தொடர்பான புரொகிராம் போட்டிகளில் பங்கேற்று உலக சாதனை படைத்தான்.

பள்ளி படிக்கும்போதே மாலை நேரங்களில் கல்லூரிக்குச் சென்று படித்து பட்டங்களும் பெற்றான். 7 வது படிக்கும்போதே 2 டிகிரி கையில் வைத்திருந்தான். அதிக பக்கங்கள் கொண்ட புத்தகங்களை சில மணி நேரத்தில் படித்துவிடுவான். அதில் இருந்து எந்தக் கேள்விகள் கேட்டாலும் எளிதாகப் பதில் அளிப்பான். அசாத்திய திறமைகளை பிரணவ் அவ்வப்போது வெளிப்படுத்துவான்.

கல்யாண் குடும்பத்தினர்
கல்யாண் குடும்பத்தினர்
நந்தகுமார்

'ஒரு ரோபோபோல் செயல்படுவான்போல' என்று நான் கேலி செய்ததும் உண்டு. இந்தத் திறமையை ஏன் நாம் வெளிக்கொண்டு வரக்கூடாது என்று யோசித்தேன். அவனுடைய எளிமையான கற்றல் முறையை, பிறருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என விரும்பினேன். முதல் மாணவியாக பிரணவின் சகோதரி ஸ்ரீயா சேர்ந்து பயிற்சி பெற்றாள். அதைத் தொடர்ந்து அவர்களின் நண்பர் கூட்டம், தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று ஆர்வம் உள்ள எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினான் பிரணவ். அதற்குள் ஸ்ரீயாவும் பல்வேறு விஷயங்களைக் கற்று பிரணவ்க்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் திறமைகளை வளர்த்துக்கொண்டாள்.

அதனால் இருவரும் இலவசமாகப் பயிற்சி வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்கள். கூட்டம் அதிகமாகவும், ஒரு பெரிய கார் செட் போன்ற இடத்தில் கரும்பலகையை மாட்டி வகுப்பு எடுக்க ஆரம்பித்தனர். ஒன்றரை வருடத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்தது. சிறியவர், பெரியவர் என்று வயது வித்தியாசம் பார்க்காமல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். எங்களின் இந்தச் சேவையைக் கேள்விப்பட்ட ஒபாமா, குடும்பத்தினர் வாழ்த்து அனுப்பி பாராட்டினர். தொடர்ந்து படித்துக்கொண்டு பிறருக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் பிரணவ் தற்போது 4 டிகிரியும், ஸ்ரீயா 3 டிகிரியும் பெற்றுள்ளனர். யூடியூப் மூலமும் பிறருக்கு பாடங்களை அண்ணன், தங்கை இருவரும் சொல்லிக்கொடுக்கின்றனர்.

ஸ்ரீயா
ஸ்ரீயா

நானும் என் மனைவி விசாலாட்சியும் எங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவு செய்வோம். அலுவலக வேலை அதிகமாக இருந்தாலும் குழந்தைகளின் கல்வி முக்கியம் என்பதில் தீவிரமாகச் செயல்படுகிறோம். இதனால் பிற பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். அவர்களின் படிப்பை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை விளக்குகிறோம். கஷ்டம் என்பது எதுவும் இல்லை.

மாணவர்களுக்கு கல்வியை இஷ்டப்பட்டு படிக்க வழிமுறையை சொல்லிக்கொடுத்தால் போதும். அனைவரும் நன்றாகப் படிப்பார்கள்.

எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதை நாம்தான் உணர்ந்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

அப்பாவைத் தொடர்ந்து பேசிய ஸ்ரீயா, "நானும் அண்ணனும் பாடங்களைப் புரிந்துபடிப்போம். அதனால் படிப்பு எங்களுக்கு எளிமையாக இருக்கிறது. அமெரிக்க கல்வி முறை மிகவும் வித்தியாசமானது. கண்டிப்பான கல்வி முறை இருக்காது. ஆசிரியர்கள் நம்மிடம் எளிமையாகப் பழகுவார்கள். பெயர் சொல்லிக்கூட அவர்களை அழைக்கலாம். அந்த அளவுக்கு நெருக்கம் கிடைக்கும். வகுப்பறையில் முடிக்காத பாடங்கள் மட்டும்தான் வீட்டுப்பாடங்களாக அமையும். மார்க் அடிப்படையில் நம் திறமைகளை அளவு செய்ய மாட்டார்கள். வகுப்பில் ரேங் முறை இருக்காது. ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும். பள்ளிகளில் தண்டனைகள் பெரிய அளவில் இருக்காது. இது போன்ற விஷயங்களால் அமெரிக்காவில் பாடங்களை எளிமையாகப் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

ஸ்ரீயா
ஸ்ரீயா
நந்தகுமார்

இளையவர்களிடம்கூட தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். ஒவ்வொரு பாடத்தையும் மற்ற பாடங்களுடன் தொடர்புபடுத்தி படிக்க வேண்டும். நமக்குப் பிடித்த விஷயங்களைக் குறியீடு கொண்டு படிக்க வேண்டும். எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்ற கணக்கீடு இருக்க வேண்டும். பாடங்களை விரும்பிப் படித்தால் போதும் எல்லோருக்கும் எளிமைதான். அதே போல் விளையாட்டு, பேச்சு என்று நமக்குப் பிடித்த விஷயங்களையும் செய்துவிட வேண்டும் அப்போதுதான் மூளையும் மனதும் புத்துணர்ச்சி அடையும்" என்றார்.