Published:Updated:

டைம்ஸ் வெளியிட்ட டாப்-100 பல்கலைக்கழகங்கள் பட்டியல்! - இந்தியாவுக்கு இடமில்லை

ஐஷ்வர்யா

கடந்த ஆண்டு வெறும் 49 பல்கலைக்கழகங்களே பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 56 பல்கலைக்கழகங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

டைம்ஸ் பட்டியல்
டைம்ஸ் பட்டியல்

`டைம்ஸ்’ இதழ், உலகின் டாப் 100 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கடுத்த இடங்களில் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

  IIT Ropar
IIT Ropar

மொத்தம் 500 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டாப் 300-ல் கூட இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டில் டாப்- 300 பட்டியலில் இடம்பெற்றிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும் தரவரிசைப் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகமும் (IIT Ropar) பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும் 350-வது இடத்துக்குள் வந்துள்ளன. முதல் 500 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அந்தப் பட்டியலிலும் தமிழகத்திலிருந்து ஒரு கல்வி நிறுவனமும் இடம்பெறவில்லை.

ஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்? #DoubtOfCommonMan

இத்தனைக்கும் இந்தப் பட்டியலுக்காக கடந்த ஆண்டு வெறும் 49 பல்கலைக்கழகங்களே பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 56 பல்கலைக்கழகங்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.