Published:Updated:

மாணவர்களை கிராமங்களுக்கே தேடிச்சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; குவியும் பாராட்டு!

பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் வசிப்பிடத்துக்கே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நேரில் சென்று பாடம் நடத்துகிறார்கள். அவர்களின் இந்தச் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கொரோனா பரவல் அச்சத்தால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகிறார்கள்.

கல்வித் தொலைக்காட்சிக்கு படப்பிடிப்பு - representational image
கல்வித் தொலைக்காட்சிக்கு படப்பிடிப்பு - representational image
கல்வித் தொலைக்காட்சியில் பாடம்; மாணவியின் வீட்டிற்கே சென்று ஊக்கப்படுத்திய கல்வி அதிகாரி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப்பட்ட போதிலும் மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆசிரியரிடம் நேரடியாகக் கல்வி கற்றுப் பழக்கப்பட்ட மாணவர்களுக்குத் தொலைக்காட்சிக் கல்வியைப் புரிந்துகொள்வதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அதனால் இந்தக் கல்வி முறையானது மாணவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாக அமைந்துவிடுமோ என்று கல்வியாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

மரத்தின் அடியில் நடக்கும் வகுப்பு
மரத்தின் அடியில் நடக்கும் வகுப்பு

இந்நிலையில், நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களைத் தேடிச் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பள்ளித் தலைமை ஆசிரியை அகஸ்டினா தலைமையில், ஆங்கில ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பிட்ட சில கிராமங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். அதன்படி மறவன்குளம் சென்ற ஆசிரியர்கள் அங்குள்ள மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து, கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம், சமூக இடைவெளியுடன் அமரச் செய்து பாடம் நடத்தினார்கள்.

சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்பு
சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்பு
"நாலே நாளில் 1,500 மாணவர்கள் தனியாரில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்!"- அன்பில் மகேஷ்

கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைக் கவனத்துடன் பார்த்துப் படிக்க வேண்டும் என்று மாணவர்களை ஆசிரியர்கள் அறிவுறுத்தினார்கள். இதே போல நாள்தோறும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தங்களின் மாணவர்களை இந்த ஆசிரியர்கள் சந்தித்து பாடம் நடத்தி வருவதை பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு