டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பங்குபெற்றாலும், பலருக்கும் முறையான வழிகாட்டல் கிடைப்பதில்லை. அதை மனதில் கொண்டே டி.என்.பி.எஸ்.சி தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை ஆனந்த விகடன் தொடர்ந்து நடத்தி வருகிறது. மீண்டும் அப்படி ஓர் இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜூலை மாத இறுதியில் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தவிருக்கிறது ஆனந்த விகடன்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஏற்கெனவே எழுதியவர்கள், இனி எழுதவிருப்பவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். ஜூலை 24 மற்றும் ஜூலை 25 இரு நாள்களும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் நாள் காலை அமர்வில், தமிழ்நாடு பாடநூல் கழகத் துணை இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன், தாழையூத்து டி.எஸ்.பி, பி.அர்ச்சனா ஆகியோர் உரையாற்றுகின்றனர். கேள்வி-பதில் பகுதியை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஒருங்கிணைக்கிறார்.
மாலை அமர்வில், டி.எஸ்.பி, இ.சதிஸ்குமார் மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையச் செயலாளர் க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். கேள்வி-பதில் பகுதியை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஒருங்கிணைக்க, முதல் நாள் அமர்வுகள் நிறைவுபெறும்.

இரண்டாம் நாளின் முதல் அமர்வில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ், மதுரை சார் ஆட்சியர் திவ்ய பிரியதர்ஷினி ஆகியோர் உரையாற்ற, கேள்வி-பதில் பகுதியை சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் எஸ்.சிவராஜவேல் ஒருங்கிணைக்கிறார்.
நிகழ்வின் இறுதி அமர்வில், டி.எஸ்.பி. என்.சுரேஷ், கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகியோர் உரையாற்றுகின்றனர். சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் எஸ்.சிவராஜவேல் கேள்வி-பதில் பகுதியை ஒருங்கிணைக்க, இந்த வழிகாட்டல் நிகழ்வு நிறைவுபெறுகிறது.
முழுவதுமாக இணைய வழியில், Zoom செயலியில் நடக்கும் இந்த டி.என்.பி.எஸ்.சி வழிகாட்டல் நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். இணையவழி கருத்தரங்கிற்கான முன்பதிவுக்கு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு: 96263 64444, 96263 69899, 97909 90404 எண்களைத் தொடர்புகொள்ளவும்.