சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

``வெற்றியடைய தோல்வியடையுங்கள்!’’

ஒருநாள் ஆலோசனை முகாம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒருநாள் ஆலோசனை முகாம்

மன உறுதியை இழக்கவில்லை

“உங்களின் இலக்கை நீங்கள் முடிவு செய்யாதவரை வெற்றி சாத்தியமில்லை. தற்போது புற்றீசல்போல் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள், புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

சரியானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படித்துத்தான் நான் தேர்ச்சி பெற்றேன். எங்கள் கிராமத்துக்கு இப்போதும் முறையான பேருந்து வசதிகளில்லை. இப்படியான சூழலில் வளர்ந்த என்னாலும் ஐ.ஏ.எஸ் ஆக முடிந்தது என்றால், உங்களால் ஏன் முடியாது...?”

தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ் சொன்ன வார்த்தைகள் அரங்கில் கூடியிருந்த அத்தனை மாணவர்களையும் நிமிர்ந்து அமரச் செய்தன. கடந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் பத்தாவது இடம் பிடித்தவர் இவர்.

ஒருநாள் ஆலோசனை முகாம்
ஒருநாள் ஆலோசனை முகாம்

ஆனந்த விகடன் - ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் நிறுவனம் இணைந்து திருச்சியில் நடத்திய ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான ஒருநாள் ஆலோசனை முகாமில் தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ் பங்கேற்றுப் பேசினார்.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எம்.ரவி ஐ.பி.எஸ், எழுத்தாளர் டாக்டர் சங்கரசரவணன், தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான சிவராஜவேல், சாதிக் உள்ளிட்டோர் மேடையேறினார்கள். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த வழக்கறிஞர் முனியராஜின் டைமிங் பொன்மொழிகள் சுவாரஸ்யம் கூட்ட, இடையிடையே கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

“போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் தோல்வியடைவதற்குத் தயாராக இருக்க வேண்டும். உலகில் சாதித்த பலரும், முதலில் தோல்வியடைந்தவர்கள்தாம். போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் என்ன படிக்கணும், எப்படிப் படிக்கணும் என்பதை முதலில் தெரிந்துகொண்டு, நிதானமாக முறையாகப் படிக்க வேண்டும்” என சிவராஜவேல் நிறைவுசெய்ய, காவல் துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் எம்.ரவி இறுதியாகப் பேசினார்.

ஒருநாள் ஆலோசனை முகாம்
ஒருநாள் ஆலோசனை முகாம்

“டாக்டருக்குப் படிக்க விரும்பிய எனக்கு பி.எஸ்ஸி அக்ரிதான் கிடைத்தது. ஆனாலும் மன உறுதியை இழக்கவில்லை. 1985 காலகட்டங்களில் இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுத இருந்த வயது வரம்பால் நானும் பாதிக்கப்பட்டேன். இந்தச்சூழலில் டெல்லியில் வங்கிப்பணி கிடைத்தது. நல்ல வேலை, கை நிறையச் சம்பளம்.

1990-ல் யூ.பி.எஸ்.சி, வயது வரம்பில் மாற்றம் கொண்டுவந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டேன். இன்று, நான் உங்கள் முன் நிற்பதற்கு அந்த வாய்ப்புதான் காரணம்” என்றார் ரவி.