Published:Updated:

மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கல்லூரி பட்டப்படிப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி
கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்று, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப் பெறும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. J. Jayalalitha Music and Fine Arts University) இணைப்பு பெற்ற கல்லூரியாக, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் (Department of Art and Culture) கீழாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் (Government College of Architecture and Sculpture) இடம் பெற்றிருக்கும் நான்கு ஆண்டு கால அளவிலான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி

சிற்பங்கள்
சிற்பங்கள்

தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வணிகத் துறையின் வழிகாட்டுதலுடன், சிற்பம் மற்றும் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தின் எல்லைகளைப் புத்துயிரூட்டி, அதனை விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் 1957 ஆம் ஆண்டில் மாமல்லபுரத்தில் சிற்பப் பயிற்சி மையமாக நிறுவப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் முதலில் நான்காண்டு கால அளவிலான கட்டடக்கலை மற்றும் சிற்பத்திலான சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்பு, 1975-1976 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் இம்மையத்தில் பட்டயப் படிப்புகள் (Diploma Courses) அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சிற்பப் பயிற்சி மையத்தின் பெயரும், தமிழ்நாடு கட்டடக்கலை மற்றும் சிற்பப் பயிற்சி மையம் எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

1981 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலுடன் இம்மையத்தில், கோயில் கட்டடக்கலையில் பி.எஸ்சி பட்டப்படிப்பைத் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, 1984 ஆம் ஆண்டில் கல் சிற்பம், சுதை சிற்பம், மர சிற்பம் மற்றும் உலோகச் சிற்பம் எனும் நான்கு பிரிவுகளில் பி.எஸ்சி பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் தரத்திற்கு இணையாக இம்மையத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மூன்றாண்டு கால அளவிலான பட்டப்படிப்புகள் நான்காண்டு கால அளவிற்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியாகவும் மாற்றம் செய்யப்பட்டது.

கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி
கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி

இளங்கலைப் பட்டப்படிப்புகள்

இக்கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபுக் கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் (B.Tech., Degree in Traditional Architecture) 10 இடங்கள் இருக்கின்றன. கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலைப் பட்டப்படிப்பில் (B.F.A - Traditional Sculpture) 1) கல் சிற்பம் (Stone Sculpture) பிரிவில் 5 இடங்கள், 2) உலோகச் சிற்பம் (Metal Sculpture) பிரிவில் 5 இடங்கள், 3) மரச்சிற்பம் (Wood Sculpture) பிரிவில் 15 இடங்கள், 4) சுதைச்சிற்பம் (Sudhai Sculpture) பிரிவில் 15 இடங்கள் என்று மொத்தம் 40 இடங்களும், கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்பில் (B.F.A - (Traditional Drawing and Painting) 10 இடங்களும் இருக்கின்றன.

இளம் மாணவ விஞ்ஞானி: அறிவியல் படிப்புகளுக்கு உதவித்தொகை - தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கான வழிகாட்டல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்வித்தகுதி மற்றும் வயது

இளையர் மரபுக் கட்டடக்கலைப் பட்டப்படிப்புக்கு (B.Tech., Degree in Traditional Architecture) 10+2 அல்லது அதற்கு இணையான கல்வியில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலைப் பட்டப்படிப்பு மற்றும் கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்புகளுக்கு 10+2 அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 26 வயது நிறைவடையாமலும், பிற பிரிவினர் 23 வயது நிறைவடையாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம்
விண்ணப்பம்

விண்ணப்பப் படிவம்

இக்கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களில் எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.50/-, பிற பிரிவினர் ரூ.100/- என்று விண்ணப்பக் கட்டணத்தை "Account Name: Principal, Govt. College of Architecture and Sculpture, Mamallapuram, Bank: State Bank of India, Account Number: 11263357303, Branch Name: Tirukkazhukkundram, IFSC Code: SBIN0001191" எனும் கல்லூரியின் வங்கிக் கணக்கில் செலுத்தி, அதற்கான செலுத்துச்சீட்டு (Challan) மற்றும் உரிய சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்பத்தை https://www.artandculture.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்திடக் கடைசி நாள்: 25-8-2021.

மாணவர் சேர்க்கை

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்று, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப் பெறும்.

கல்விக் கட்டணம்

இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெறும் மாணவர்கள், கல்விக்கட்டணம் ரூ.420/- (ஆண்டுக்கு), சிறப்புக் கட்டணம் ரூ.800/- (ஆண்டுக்கு), பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.1150/- (ஆண்டுக்கு), கல்லூரிக் கட்டணம் ரூ. 1040/-, முன்வைப்புத்தொகை ரூ.2000/- (திரும்பப் பெறக்கூடியது) என்று கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். மேற்காணும் கட்டணங்களில் எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்குக் கல்விக்கட்டணம் மட்டும் இல்லை.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

கூடுதல் தகவல்கள்

இக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய https://www.artandculture.tn.gov.in/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது “முதல்வர், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் - 603104” எனும் முகவரிக்கு நேரில் சென்று தகவல்களைப் பெறலாம் அல்லது 044-27442261 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு