Published:Updated:

இனி ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம்; அனுமதி வழங்கியது யுஜிசி!

கல்லூரி மாணவர்கள்

கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

இனி ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம்; அனுமதி வழங்கியது யுஜிசி!

கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

Published:Updated:
கல்லூரி மாணவர்கள்

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் படிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதன்கிழமை அன்று வெளியிட்டது. அதன்படி கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வுசெய்து படிக்கலாம். இதற்காக மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்குச் சென்றோ அல்லது ஆன்லைனிலோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

direct class
direct class

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து யுஜிசியின் தலைவர் எம் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ``மாணவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது இருவேறு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ இரண்டு முழு நேர பட்டப் படிப்புகளைத் தொடர அனுமதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஒரு பட்டப் படிப்பை நேரடியாக ஒரு கல்லூரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை ஆன்லைன் வழியாக அல்லது தொலை தூரக் கல்வி முறையில் கற்கலாம் அல்லது இரண்டையும் நேரடி வகுப்புகளாக கல்லூரியில் சென்று கற்பது என மாணவர்கள் முடிவெடுத்தால் வெவ்வேறு கல்லூரி நேரங்களில் சேர்ந்து படிக்கலாம். இந்த நெறிமுறை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், முனைவர் பட்டத்திற்குப் பொருந்தாது. 

ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி முறையின்கீழ் டிப்ளோமா அல்லது பட்டப்படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், யுஜிசி கவுன்சில் அல்லது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். ஏப்ரல் 13 புதன்கிழமை முதல் இந்தக் கல்வி முறை அமலுக்கு வருவதால், இதற்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைப் பயின்ற மாணவர்களால் எந்தப் பயனையும் இதில் கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism