2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய கல்வி கொள்கையின்படி மாணவர்கள் ஒரே நேரத்தில் இருவேறு பட்டபடிப்புகளை படிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது UGC எனப்படக்கூடிய பல்கலைக்கழக மானிய குழு. இரு வேறு பல்கலைக்கழகங்களில் இரு வேறு படிப்பை அதுவும் நேரடி வகுப்பின் மூலமாகவே படிக்கக்கூடிய இந்த புதிய திட்டத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு விரிவாக விளக்கமளித்தார் UGC-யின் தலைவரான எம்.ஜெகதீஷ் குமார்.

“ அதிகரித்து வரும் உயர்கல்வி படிப்புகளுக்கான தேவையையும், கல்லூரிகளில் உள்ள குறைவான இடங்களையும் இணைப்பதற்காக பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் புதிய மற்றும் தொலைதூர படிப்புகளை அதிக அளவில் அறிமுகப்படுத்திவருகின்றன. இந்த ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கக்கூடிய திட்டமும் கூட பல கட்ட ஆய்விற்கும் ஆலோசனைக்கும் பிறகே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிவிடாமல் பல்துறைகளை கற்பதற்கான வாய்ப்பை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்ககிட வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை கூறுகிறது. இதன்படி இந்த புதிய வசதி மாணவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தங்களின் கல்வியை வடிவமைத்துக் கொள்ளும் வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது ”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“இது மாணவர்களுக்கு அதிக சுமையை அளித்திடும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. ஏனென்றால் இந்த புதிய திட்டம் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தே அன்று கட்டாயம் கிடையாது. கற்றல்மீது பேரார்வம் கொண்டிருப்பவர்கள், அதிக வேலைப் பழு இருப்பினும் அதை சமாளிக்கக்கூடியவர்கள் இந்த புதிய திட்டத்தை நன்கு உபயோகித்துக்கொள்ளலாம்”

ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு வேறு கல்வி நிறுவனங்களில் படித்தால் மற்றவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்ற விமர்சனமும் ஏற்படாமல் இல்லை. இதற்கும் தெளிவாக விளக்கமளித்துள்ளார் ஜெகதீஷ். “ ஒரு மாணவரை இருவேறு படிப்புகளை இரு வேறு கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கும்போது அதற்கேற்ற சரியான வழிமுறைகளை அக்கல்வி நிறுவனங்கள் வகுப்பது மிக அவசியம். அதேபோல இரண்டாவது படிப்பிற்கு ஒரு மாணவர் விண்ணப்பிக்கும் போது அதே படிப்பை முதல் பாடமாக விண்ணப்பத்தவர்கள் யாரும் இல்லாதவாறு கல்லூரிகள் உறுதிசெய்திட வேண்டும். அப்படி யாரும் இல்லாமல் இருந்து இரண்டாவது படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான இடங்களும் காலியாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தாராளமாக படிக்கலாம். மேலும் கல்லூரி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதி அனுமதித்தால் கூடுதலாக சீட்டுகள் உருவாக்கிடவும் வாய்ப்பிருக்கிறது.”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஒரே நேரத்தில் இரு படிப்புகள் கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடுமல்லவா என்ற கேள்விக்கு “இந்த புதிய வசதியால் இரண்டாவது படிப்பை படிப்போருக்கு அதிக அளவிலான ஆன்-லைன் கோர்ஸ்கள் உருவாகிடக்கூடும். இதனால் உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கல்வித் தரத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது” என்று கூறினார்.