எம்.பில் படிப்பை முடித்தவர்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவர்களாக முன்பு பார்க்கப்பட்டு வந்தது. எனவே, பெரும்பாலான மாணவர்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்த பலரும் அடுத்து தொடர நினைப்பது எம்.பில் படிப்பைதான். இந்நிலையில் எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக்குழு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கற்பித்தல் பணிக்கு எம்.பில் படிப்பு தகுதியானது இல்லை, எம்.பில் படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாதென வரும் கல்வியாண்டில் (2022-23 ) இருந்து எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை படிப்பு படித்து அதன் பிறகு எம்.பில் படிப்பை மாணவர்கள் படித்து வந்த நிலையில், இனி வரும் கல்வியாண்டில் இருந்து எம்.பில் படிப்பு முழுவதுமாக நீக்கப்படும் என அறிவித்துள்ளது. இனி பிஹெச்டி படிப்பதற்கு எம்.பில் தகுதியாகப் பார்க்கப்படாது.
மேலும் ஏற்கெனவே எம்.பில் படிப்பில் சேர்ந்து படிப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும், அதேபோல் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த எம்.பில் பட்டங்கள் செல்லும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

இருந்தாலும் இந்த அறிவிப்பினால் ஏற்கெனவே எம்.பில் படிப்பை முடித்தவர்களும், தற்போது படித்துக்கொண்டிருப்பவர்களும் கவலையில் உள்ளனர்.