Published:Updated:

`பயமின்றித் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்'- விகடனின் UPSC, TNPSC இலவசப் பயிற்சி முகாம்

UPSC TNPSC
UPSC TNPSC

தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விகடன் பிரசுரம் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய UPSC, TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. திரு.ஜவஹர் ஐ.ஏ.எஸ், திரு.சங்கர சரவணன் மற்றும் திரு.சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

vikatan event
vikatan event

தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கிங் `மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் உதவித் தொகைத் தேர்வு நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகளில் பயமில்லாமல் கலந்துகொள்வது குறித்தும், தேர்வு எந்த முறையில் நடத்தப்படுகிறது. அதற்கு எவ்வாறெல்லாம் தயாராகலாம் என்பது குறித்தும் திரு. ஜவஹர் ஐ.ஏ.எஸ் அவர்களும், டாக்டர் திரு.சங்கர சரவணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாகப் பேசிய திரு.சத்யஸ்ரீ பூமிநாதன் அவர்கள், தமிழகத்தில் UPSC தேர்வுகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைந்து வருவது குறித்துப் பகிர்ந்து கொண்டார். பின்னர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு திரு.ஜவஹர் அவர்கள் பதிலளித்தார்.

vikatan event
vikatan event

இறுதியாக மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைக் கூறி, உதவித் தொகைத் தேர்வில் முதல் பத்து இடம் பெற்ற மாணவர்களைக் கௌரவித்து நன்றியுரை கூறி விழாவினை முடித்து வைத்தார்.

விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் ‌UPSC, TNPSC இலவச பயிற்சி முகாமில் கிங்மேக்கர்ஸ் அகாடமியின் கௌரவ ஆலோசகர் திரு.சத்யஸ்ரீ பூமிநாதன் அவர்கள் ஆலோசனை வழங்கி உரையாற்றினார்

Posted by Vikatan EMagazine on Saturday, December 28, 2019
அடுத்த கட்டுரைக்கு