Published:Updated:

`விகடன் கல்வி வெபினாரி’ல் மாணவர்கள் கேட்ட கேள்விகள்... நிபுணர்களின் பதில்கள் - பகுதி- 2

விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ
விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ

ஆனந்த விகடன் சார்பில், 'மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ' நேற்று தொடங்கி இன்றும் ( மே9 மற்றும் மே 10 ) வெபினார் மூலம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று, சிறப்பு அழைப்பாளர்களுடன் மாணவர்களும் பெற்றோர்களும் வெபினாரில் இணைந்தார்கள்.

ஆனந்த விகடன் சார்பில் ' மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ' நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. இந்த வெபினாரில், மாணவர்களும் பெற்றோரும் கேட்ட கேள்விகளுக்கு, சிறப்புப் பேச்சாளர்கள் பதிலளித்தனர். அந்தக் கேள்வி பதில்கள் இதோ:

ஸ்பான்சர்கள்
ஸ்பான்சர்கள்

டாக்டர். சங்கர சரவணன், கல்வியாளர்

துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.

1.``இன்ஜினீயரிங்கில் பல பிரிவுகள் உள்ளன. அதில் எந்தப் பிரிவைத் தேர்வுசெய்வது?”

"இன்ஜினீயரிங்கைப் பொறுத்தவரை இருவிதமாகப் பிரிவுகளைத் தேர்வுசெய்யலாம். சிவில், மெக்கானிக்கல் போன்றவற்றுக்கு எப்போதும் தேவை இருக்கும். அதைப் பலரும் தேர்வுசெய்வர். இன்ஜினீயரிங் என்பது படிப்பல்ல. அது நுட்பமான சூட்சுமம் என்றுதான் சொல்ல வேண்டும். சிக்கலான விஷயத்தை நுட்பமாக அணுகி தீர்வு காண்பது. சிலர் ஐ.டி , கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை விரும்புவர். சிலர், பொறியியல் துறையில் அரசு வேலைக்குச் செல்ல விரும்புவார்கள். அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது Equivalent Certificate தேவைப்படும் . அதுபோன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்."

”Forensic Science, Psychology போன்ற படிப்புகளைத் தேர்வு செய்யலாமா? வேலை வாய்ப்புகள் உள்ளதா?”

" 'Criminology and Forensic Science' என்ற படிப்பு உள்ளது. 'Forensic Science' பற்றி தனியாகவும் கோர்ஸ் உள்ளது. அது ஒரு அறிவியல் படிப்பு. அதைப் பற்றி இணையத்தில் நிறைய தரவுகள் காணக்கிடைக்கின்றன. அரசாங்கத்திலேயே நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன."

டாக்டர் சங்கர சரவணன்.
டாக்டர் சங்கர சரவணன்.

”பிளஸ் 2 -வில் Commerce படித்தவர்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலம் வாய்க்கும்?”

" Commerce படிப்பவர்கள், பொதுவாக இருவிதமாகத் தங்கள் படிப்பைத் திட்டமிடுவார்கள். சிலர் B.Com, M.Com படித்த பிறகு M.B.A, சி.ஏ எனப் படிப்பார்கள். சிலர், பிசினஸ் பக்கம் கவனத்தைச் செலுத்துவார்கள். சிலர், வங்கித் தேர்வுகள் எழுதி வங்கி வேலைக்குச் செல்வர். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக விரும்புபவர்கள், கல்லூரி நாள்களிலேயே அறிவியலையும் படித்துவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முன் திட்டமிடல் அவசியம். சி.ஏ படிக்க விரும்புபவர்களும் கல்லூரியில் படிக்கும்போதே அதற்கான திட்டமிடல் இருந்தால் சிறப்பாக இருக்கும். +1, +2 Commerce பாடப் புத்தகத்திலேயே 'Career Guidance' தரப்பட்டுள்ளது. அது, மாணவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இருக்கும் "

”அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் என்னென்ன?”

"+2 முடித்த பிறகு எழுதும் வகையில் கிட்டத்தட்ட 70 -லிருந்து 80 நுழைவுத் தேர்வுகள் உள்ளன. மருத்துவத்துக்கு நீட் தேர்வு உள்ளது. சட்டம் படிப்பவர்களுக்கு 'CLAT' தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல இன்ஸ்டிட்யூட் சார்ந்து சில தேர்வுகள் உள்ளன. ஐஐடி - யில் படிப்பதற்கென நுழைவுத்தேர்வு உள்ளது. பிட்ஸ் பிலானியில் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது. ஆனால், அனைவரும் இந்த நுழைவுத்தேர்வுகள் அனைத்தையும் எழுதுவதில்லை. அதற்கென பெற்றோர் அல்லது ஆசிரியர் போன்றோரின் வழிகாட்டுதல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டிகிரி முடித்த பிறகு எழுதக்கூடிய நுழைவுத் தேர்வுகளும் உண்டு. சிலர், மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதுவர். JRF, SRF போன்ற தேர்வுகள் உண்டு. இந்தத் தேர்வுகளை எழுதி வெல்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும்."

K.காசிராஜன்

இணைப் பேராசிரியர், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்.

”B.E Civil Engineering படிப்புக்கும் B.Arch படிப்புக்கும் என்ன வித்தியாசம்?”

K.காசிராஜன்
K.காசிராஜன்

"இது, தொடர்ச்சியாக பலருக்கும் இருக்கும் குழப்பம். ஆர்கிடெக்ட் படிப்பு என்பது அடிப்படையில் Space சார்ந்து படிக்கக்கூடிய ஒன்று. உதாரணத்துக்கு, ஒரு அறைக்குள் நான்கு சுவர்களுக்குள்ளாக இருக்கும் இடத்தை எப்படி நேர்த்தியாக வடிவமைப்பது என்பதைப் பற்றிப் படிக்கும் படிப்பு. சிவில் இன்ஜினீயரிங் என்பது, அந்த நான்கு சுவரைக் கட்டுவது பற்றி படிப்பது. சுவர் எழுப்புவது, தளம் அமைப்பது, என அந்தக் கட்டடத்தின் Structural பற்றிப் படிப்பது . இதுதான் இரண்டுக்குமான வேறுபாடு."

முனைவர் L.அருணாச்சலம்

தலைவர், பயிற்சி & வேலைவாய்ப்பு, சாய்ராம் இன்ஸ்டிட்யூஷன்ஸ்.

”Coding Skills -ஐ பொறுத்தவரையில் எந்த Coding language அதிக அளவில் Placement - க்குப் பயனுள்ள வகையில் உள்ளது?”

"C - language என்பது அடிப்படையான ஒன்று. அதில் நீங்கள் தெளிவாக இருந்தால், ' java' போன்றவற்றைத் தெளிவாக அணுகலாம். C- language என்பது அடிப்படையான ஒன்று. அனைத்து நிறுவனங்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் பணிசெய்கின்றன. C- language- ல் நீங்கள் தெளிவாக இருந்தால் நீங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லலாம். "

முனைவர் L.அருணாச்சலம்
முனைவர் L.அருணாச்சலம்

”ஆங்கிலம் தெரியாவிட்டால் Placement -ல் வேலை கிடைப்பது கடினம் என்ற பொது பிம்பம் உள்ளது. ஆங்கில அறிவு எந்த அளவுக்கு அவசியம்?”

" அப்படி சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. வேலை எடுக்கும் நிறுவனத்தில் நாம் யாரோடு பணிபுரிகிறோம், யாருடன் பேசப்போகிறோம் என்பதன் காரணமாகத்தான் ஆங்கிலம் அவசியமாகிறது. அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு Client - களுடன் உரையாட பொதுமொழியான ஆங்கிலம் அவசியமாகிறது. எனவேதான் அந்தச் சூழல். ஆனால், பல மாணவர்கள் இப்போது எளிதாக ஆங்கிலத்தில் உரையாடப் பழகிவிட்டனர். "

இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, கேள்விகளை சிறப்புப் பேச்சாளர்களிடம் கேட்க இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு