பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

புதிய பயணம்... புதிய எழுச்சி... புறப்பட்ட புதிய சிற்பிகள்..!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - 2022 - 23

அடுத்த தலைமுறையை செதுக்கும் விகடனின் பெருமைமிகுத் தடங்களில் ஒன்று மாணவப் பத்திரிகை யாளர் பயிற்சித் திட்டம். ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் முழுவதிலும் இருந்து பத்திரிகை துறையின் மீது ஆர்வம் கொண்ட மாணவர் களுக்கு பயிற்சியளித்து, அவர் களை சமூக சிந்தனையாளர் களாக மாற்றும் பயணத்தை விகடன் செய்து வருகிறது.

இந்நிலையில் 2022 - 23-ம் ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர்களாக 56 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தனர். சென்னை ராயப்பேட்டை சி.எஸ்.ஐ சினாட் மையத்தில் ஜூலை 30, 31 தேதிகளில் மாணவர் களுக்கான இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. இந்த இரண்டு நாள் களில் அரசியல், சினிமா, சமூகம் என பல்துறை சார்ந்த பிரபலங்கள் வந்து மாணவர் களுக்கு உத்வேகத்தை அளித்தனர்.

புதிய பயணம்... புதிய எழுச்சி... புறப்பட்ட புதிய சிற்பிகள்..!

முதல் நாள் பயிற்சி முகாமில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனி வாசன், மாணவர் களை வரவேற்று அவர்களின் பணி பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். ஒரு இளம் பத்திரிகையாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற் கான இலக்கணத்தை வகுப்ப தாக இருந்தது அவரின் பேச்சு.

அடுத்ததாக, தி நியூஸ் மினிட் சீனியர் நியூஸ் எடிட்டர் ஷபீர் அஹமது ‘இன்றைய ஊடகம்’ என்ற தலைப்பில், அறத்தோடு செய்தியை பதிவிடுவது எப்படி எனக் கூறி, தன்னுடைய கள அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த லாக்அப் மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கொண்டுவர அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி விவரித் ததை இளம் பத்திரிகை யாளர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

முதல்நாள் மதியம், மாணவர்களை மகிழ்ச்சி யூட்ட, யூடியூபர் மதன் கௌரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில், நான் பத்திரிகையாளர்களைப் போல களஆய்வுகள் மேற்கொண்டதில்லை. ஒரு டீக்கடை பெஞ்சில் பேசப்படும் விஷயங்களை மக்கள் விரும்பும் வகையில் பேசுகிறேன். செய்திக்கான தரவுகளை இணையத்தில் இருந்தே எடுப்பேன் எனத் தன் வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.

பா.சீனிவாசன்
பா.சீனிவாசன்

புதுப் பொலிவோடு தொடங்கிய இரண்டாம் நாளில், மனநலம் குறித்து பேசிய டாக்டர் சிவபாலன் இளங்கோவன், தற்காலத்து இளைஞர்களின் மனநலம் எவ்வாறு இருக்கிறது, பல மாற்றங்களைக் கண்டுள்ள சமூகத்தில், அவற்றை கருத்தில்கொண்டு எவ்வாறு செய்தியைப் பதிவிட வேண்டும் எனக் விவரித்து, மாணவர்களின் உளவியல் ரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அடுத்ததாக வெற்றிவாகை சூடிய திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பலத்த கைதட்டல் களுக்கு மத்தியில் மேடையேறினார். மாணவர்களிடம், “என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளவே 26 வயதானது. நீங்கள் என்னவாகப்போகிறீர்கள் என்பது இப்போதே உங்களுக்குத் தெரிகிறது. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறி, தனது எதிர்காலத் திட்டம், கடந்து வந்த பாதை, கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் என மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்க நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் மேடையேறினார். பல வருடத்துக்குப் பிறகு, தேசிய விருதின் அங்கீகாரம் அவரைத் தொட, ஜீ.வி ஏறிய முதல் மேடை இதுவே. அரசியல், சினிமா, இசை, பாடகர்கள், குடும்பம் என மாணவர்களின் கேள்விகளுக்கு சிரித்த முகத்துடனே பதிலளித்தார். மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க அவர் சில பாடல்களையும் பாடி அசத்தினார்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்வில், மாணவர் களுக்கு நிறைய சர்ப்ரைஸ்களும், புது அனுபவமும் கிடைக்க, வாழ்வின் புது பயணத்தைக் கடக்க மாணவர்கள் தயாரானார்கள். எங்கள் வாழ்நாளில் இந்த இரண்டு நாள்களை எங்களால் மறக்க முடியாது என்றபடி, தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர்.வாழ்த்துகள் மாணவர்களே, பேனாவின் முனையைக் கூர்மைப்படுத்திக்கொள்ளுங்கள். மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துங்கள்!