Published:Updated:

குழந்தைகளிடையே அதிகரிக்கும் `ஃபுடோகோ' மனநிலை! - தீர்வைத் தேடும் ஜப்பான்

30 நாள்களுக்கு மேல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் ஃபுடோகோ என்று அழைக்கப்படுகின்றனர்.

Representational Image
Representational Image

ப்பானில் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இது `ஃபுடோகோ' மனநிலை என்று அழைக்கப்படுகிறது. `ஃபுடோகோ' என்பதற்கு 'பள்ளிக்கு வருகை குறைவு, பள்ளி பற்றிய பயம் அல்லது பள்ளி செல்ல மறுப்பு' எனப் பல்வேறு அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

children
children

"ஜப்பானில் பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் வீட்டில் பெற்றோர்களுடன் இருக்கவே விரும்புகிறார்களே தவிர, பள்ளி செல்ல விரும்பவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பள்ளியைத் தவிர்க்கும் இந்த மனநிலை 1992 வரை 'டோகோக்யோஷி' என்று அழைக்கப்பட்டது. இதற்கு 'எதிர்ப்பு' அல்லது 'மனநோய்' என்று பொருள் வருவதால் இந்தச் சொல் 1997-ம் ஆண்டு `ஃபுடோகோ' என்று மாற்றப்பட்டது. இதற்குச் 'சரியான வருகைப் பதிவு இல்லாதது' என்று பொருள்.

30 நாள்களுக்கு மேல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் ஃபுடோகோ என்று அழைக்கப்படுகின்றனர். கடந்த 2017-ல் 1.44 லட்சமாக இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 1.64 லட்சமாக அதிகரித்தது.

இதுபோல் பள்ளி செல்ல விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்தும்போது அவர்கள் தற்கொலை முடிவைக் கூட எடுக்கிறார்கள் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் ஜப்பானில் பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

Representational Image
Representational Image

அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க 2016-ம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கம் பள்ளிகளுக்கான சிறப்புப் பரிந்துரைகளுடன் தற்கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலுக்குப் பதிலளிக்கும் விதமாக 1970 மற்றும் 1980-களில் கடுமையான பள்ளி விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிமுறைகள் "கறுப்புப் பள்ளி விதிகள்" என்று அழைக்கப்படுகின்றன.

"குழந்தைகளை மரங்களில் ஏறி விளையாட அனுமதிக்கலாமா?" - ஓர் அலசல்

இருப்பினும் மாணவர்களிடையே ஏன் பள்ளியை வெறுக்கும் இந்த குணம் வருகிறது என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் குடும்ப சூழ்நிலைகள், நண்பர்களுடனான தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் கொடுமைப்படுத்துதல் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன.

``வீட்டுக்கு வெளியே அல்லது குடும்பத்திலிருந்து விலகி எங்களால் பேச முடியவில்லை", "பள்ளி வாழ்க்கை வேதனையாக இருக்கிறது" என்ற பதில்களே பெரும்பாலான மாணவர்களிடமிருந்து கிடைத்தன.

Representational Image
Representational Image

எனவே, இது போன்ற ஃபுடோகோ மாணவர்களுக்காக இலவசப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலவசப் பள்ளி இயக்கம் ஜப்பானில் 1980-களில் தொடங்கியது, பெருகி வரும் ஃபுடோகோவுக்கு பதிலளிக்கும் வகையில் அவை சுதந்திரம் மற்றும் தனித்துவத்தின் கொள்கைகளில் இயங்குகின்றன. இவை கட்டாயக் கல்விக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றாக இயங்குகின்றன.

இங்கு மாணவர்கள் தங்கள் சீருடையை அணியத் தேவையில்லை. மேலும், அவர்களின் தனிப்பட்ட திறன்களையும் விருப்பங்களையும் பின்பற்ற ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். மாணவர்களின் பிரச்னைகளும் கண்டறியப்பட்டுக் களையப்படுகின்றன. இந்தப் பள்ளிகள் ஒரு குடும்பம் போல செயல்படுவதால் மாணவர்கள் விரும்பி இலவச பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.