வெற்றிக்கான பயணத்தில் கடின உழைப்பு அர்ப்பணிப்போடு சேர்த்து கூடுதலாக மூன்றாவதாக ஒன்றும் மிக அவசியமாகிறது. சரியான திட்டமிடல் தான் அது. நல்லதொரு வியூகத்துடன் திட்டமிடப்படாத இடத்தில்தான் கூடுதல் உழைப்பிற்கான அவசியம் உண்டாகிறது. சில நேரங்களில் எத்தனை உழைப்பு இருப்பினும் சரியான திட்டமிடல் இன்மை இலக்கின் தூரத்தை அதிகரித்து விடுகிறது.

இது TNPSC, UPSC போன்ற போட்டி தேர்வுகளில் இன்னுமும் கூட பொருந்தி போகும். இந்திய நாட்டின் மிக கடினமான தேர்வுகளுள் ஒன்று குடிமை பணிக்கான சிவில் சர்விஸ் தேர்வு. நம்மில் பலருக்கும் இந்த தேர்வில் வெற்றி பெற்று IAS, IPS போன்ற இன்னும் பல அதிகாரிகளாக பணியில் சேர்வது போன்ற பல கனவுகளிருக்கும். உழைப்பிற்கும், அர்பணிப்பிற்கும் தயாராக இருக்கும் உங்களில் பலருக்கும் தேர்விற்கு தயாராகும் முறை பற்றி சந்தேகங்கள் இருக்கக்கூடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எதிலிருந்து படிக்க தொடங்கலாம், எதற்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும், மொத்த பயிற்சிக்காலத்திற்கான வியூகத்தையும் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பது போல இன்னும் பல சந்தேகங்கள் இருக்கக்கூடும். உங்களுக்காக ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் IAS அகெடமி பயிற்சி முகாம் ஒன்றை நடக்கவிருக்கிறது. UPSC, TNPSC தேர்வுகளுக்கான அந்த பயிற்சி முகாம் மற்றும் 1 வருட இலவச பயிற்சிக்கான Scholarship Test வரும் ஏப்ரல் 17-ம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் (VR), சென்னை மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி துறையின் துணை ஆணையரான M.திவ்யா (IRS) ஆகியோர் அவர்க்ளின் அனுபவங்களை பகிர இருக்கின்றனர்.
முன்பதிவிற்கான லிங்க் கீழே...