Published:Updated:

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! - அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

வாக்களிக்க வந்த 101 வயது முதியவர்

`எனக்கு வாக்குரிமை கிடைத்தது முதல் இதுவரை நடந்த எல்லா தேர்தலிலும் ஓட்டுப் போட்டிருக்கேன். இந்த தடவை நடக்க முடியாம இருந்தாலும் ஓட்டுப் போடணுமேன்னு கஷ்டப்பட்டு வந்தேன்’ என்கிறார், 101 வயது முதியவர்.

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! - அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

`எனக்கு வாக்குரிமை கிடைத்தது முதல் இதுவரை நடந்த எல்லா தேர்தலிலும் ஓட்டுப் போட்டிருக்கேன். இந்த தடவை நடக்க முடியாம இருந்தாலும் ஓட்டுப் போடணுமேன்னு கஷ்டப்பட்டு வந்தேன்’ என்கிறார், 101 வயது முதியவர்.

Published:Updated:
வாக்களிக்க வந்த 101 வயது முதியவர்

நெல்லை மாநகராட்சித் தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்துவருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச்சாவடிக்கு வருகிறார்கள்.

80 வயது மூதாட்டி பீமா பீவி
80 வயது மூதாட்டி பீமா பீவி

அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் கணக்குப்படி அவருக்கு 77 வயது மட்டுமே ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பீமா பீவி என்ற 80 வயது மூதாட்டி வாக்களித்ததிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாக்களித்த பின்னர் பேசிய முண்டன், ``எனக்கு இப்போது 101 வயசாகுது. சீட்டுல ஓட்டைக் குத்துற காலத்துல இருந்தே நான் ஓட்டுப்போடுறேன். முந்தியெல்லாம் எல்லாரும் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் ராத்திரி நேரத்துல நடந்தே வீட்டுக்கு வந்து ஓட்டுக் கேப்பாங்க. இப்போ காருல போய்க்கிட்டே ஓட்டுக் கேட்டுப் பேசுறாங்க.

101 வயது வாக்காளர் முண்டன்
101 வயது வாக்காளர் முண்டன்

இதுவரைக்கும் தவறாம ஓட்டுப்போட்ட நான், இந்த தடவையும் ஓட்டுப் போடணும்னுதான் கஷ்டப்பட்டு நடந்து இங்கே வந்தேன். எனக்கு வயசாவதால் நடக்க முடியலேன்னாலும் சமாளிச்சு வந்து ஓட்டுப் போட்டுட்டேன். அது சந்தோசமா இருக்கு" என்று உற்சாகமாகப் பேசியபடி வீட்டுக்குச் சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலப்பாளையம் 44-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு 80 வயதான பீமா பீவி என்பவர் வாக்களிக்க வந்தார். ஆனால், அவருக்கு பனிமாதா என்ற மீனாட்சி என்ற பெயரில் வாக்குச்சாவடி சீட்டு வழங்கப்பட்டது. அதில் வயது 36 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்துவிட்டு திரும்பினார்.

வாக்குச்சாவடி சீட்டைக் காட்டும் பீமா பீவி
வாக்குச்சாவடி சீட்டைக் காட்டும் பீமா பீவி

அவரிடம் பேசியபோது, தன்னுடைய பெயர் பீமா பீவி என்று உறுதியாகத் தெரிவித்தார். அவருக்கு, தான்போட்ட ஓட்டு தனக்குரியதுதானா அல்லது பிறருக்கு உரியதா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனாலும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய மகிழ்ச்சியில் அவர் திரும்பிச் சென்றார். முதியவர் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism