Published:Updated:

''இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும்!'' தேர்தல் கமி‌ஷனர் ஆலோசனை!

''இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும்!'' தேர்தல் கமி‌ஷனர்  ஆலோசனை!
''இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும்!'' தேர்தல் கமி‌ஷனர் ஆலோசனை!

''ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு வேண்டும்'' எனத் தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பதவியில் உள்ள அரசுகள் கொள்கைகளை வகுப்பதற்கு, தேர்தல் நடத்தை விதிகள் என்ற பெயரால் இடையூறு இல்லாமல் திட்டங்களை நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கும் போதுமான அவகாசத்தைத் தரும் என்பது தேர்தல் கமி‌ஷனின் கருத்தாக அமைந்துள்ளது. தவிர, ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவு வேண்டும். அது மட்டுமன்றி, இதற்குத் தேவையான திருத்தங்களை அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் செய்தால் மட்டுமே நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியப்படும். தற்போதைய சட்ட விதிகள், அரசியல் சாசன விதிகள், நாடாளுமன்றம் அல்லது சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், அரசியல் சாசனத்திலும் தேவையான மாற்றங்களைச் செய்து முடித்துவிட்டால், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திவிடலாம்'' என்று அப்போது தெரிவித்தார்.