Published:Updated:

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்ட ஆளுங்கட்சி!

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்ட ஆளுங்கட்சி!

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்ட ஆளுங்கட்சி!

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்ட ஆளுங்கட்சி!

Published:Updated:

ஊருக்கு முன்பாக அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக, 'வாக்களிப்பீர்' என்றபடி இரட்டை இலைகளை வரையத் தொடங்கி இருக்கிறார்கள் அ.தி.மு.கவினர். 

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்களாக இருந்த கருணாநிதியும், போஸும் மறைந்துவிட, அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்ட சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு சொல்ல, அந்தப் பதினெட்டு தொகுதிகளும் காலியாக உள்ளன.  இந்தத் தீர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத டி.டி.வி.தினகரன், முதலில் பதினெட்டு எம்.எல்.ஏ-க்களோடும் ஆலோசனை நடத்திவிட்டு, 'மேல்முறையீடு' என்றார். ஆனால், என்ன காரணத்தாலோ அடுத்த நாளே, 'இடைத்தேர்தல்களைச் சந்திப்பதாக

பதினெட்டு பேரும் சொல்லி இருக்கிறார்கள். அதனால், நாங்கள் இடைத்தேர்தலைச் சந்திக்கிறோம்' என்று கூறினார். இதனால், மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தவுள்ளது. அ.தி.மு.க,  தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இருபது தொகுதிகளிலும் யாரை நிறுத்துவது, கூட்டணிக்கு எந்தக் கட்சிகளை அழைப்பது என்று ஆலோசனை செய்து வருகிறார்கள்.  மேலும் கமல், ரஜினியும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே சின்னங்களை வரைய ஆரம்பித்துவிட்டார்கள் ஆளுங்கட்சியினர். இதுசம்பந்தமாக, கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் சிலர் நம்மிடம் பேசும்போது, ``இந்தமுறை செந்தில்பாலாஜியை ஜெயிக்கவிடக்கூடாது என்பதில் மக்களவை துணை சபாநாயகரும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தெளிவாக இருக்கிறார்கள். எவ்வளவு பணத்தையும் வேண்டுமானாலும் இறக்கி அடித்து, செந்தில்பாலாஜியை மண்ணைக் கவ்வ வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். 'ஓட்டுக்கு 5,000 இப்போதைக்கு ஓகே பண்ணுங்க. தேவைப்பட்டா கடைசி நேரத்தில் அதை

இரண்டுமடங்காக்கிக் கொள்ளலாம்' என்று அமைச்சர் தரப்பு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது சபதம் இருக்கு.

இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பணபட்டுவாடா பிரச்னையால்தான் கடந்த முறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணத்தை போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொண்டு போக ஆம்புலன்ஸில் பணம் கொண்டு போய் 'புதுசு கண்ணா புதுசு' என்ற புதிய ஐடியாவை கடைபரப்பினார் செந்தில்பாலாஜி. இந்தமுறையும் பணத்தை வாறி இறைப்பார் என்பதால், அமைச்சர் தரப்பு முன்கூட்டியே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலையில் சுக்காலியூரில் இருந்து அரவக்குறிச்சி பிரிவுசாலை வரை 30 கிலோமீட்டர் தூரத்துக்குச் சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். அநேகமாக அ.தி.மு.க சார்பில் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் களமிறக்கப்படலாமென்று பேசிக்கிறாங்க. எது எப்படியோ, தொகுதி மக்களுக்குத் தீபாவளிதான்" என்றார்கள்.