Published:Updated:

மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!

சத்யா கோபாலன்
மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!
மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!

சத்தீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்ட்டுகள் அதிகம் நிறைந்த மாநிலம். முன்னதாக அங்கு இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!

காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உட்பட மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெறும் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பண்டா என்ற கிராமத்தில் மக்கள் வாக்களிப்பதற்காக மரத்தடியில் வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மரத்தடியின் கீழ் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

மாவோயிஸ்ட்டுகளுக்கு பயந்து கையில் கம்புகளுடன் பள்ளி செல்லும் சிறுவர்கள்!

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள போச்பனி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் கைகளில் கம்புடன் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராம சிறுவர்கள் காட்டைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் சூழல் நிலவுவதால் அந்தக் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பலர் பதுங்கியிருப்பார்கள். அதனால் தங்களை பாதுகாக்கச் சிறுவர்கள் கம்புடன் செல்கின்றனர் என அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.