Published:Updated:

தேர்தல் கமிஷனுக்கு டஃப் கொடுத்த கிராமத்தலைவர் தேர்தல் - நாகர்கோவில் அருகே சுவாரஸ்யம்!

தேர்தல் கமிஷனுக்கு டஃப் கொடுத்த கிராமத்தலைவர் தேர்தல் -  நாகர்கோவில் அருகே சுவாரஸ்யம்!
தேர்தல் கமிஷனுக்கு டஃப் கொடுத்த கிராமத்தலைவர் தேர்தல் - நாகர்கோவில் அருகே சுவாரஸ்யம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது மணிக்கட்டி பொட்டல் கிராமம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள், எழுத்தாளர்கள் என பன்முகத்தன்மை கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். இந்த கிராமத்தில் இதுவரை ஊரை நிர்வகிக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர்  உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர் மக்களால் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், புதிய நிர்வாகக் குழுவிற்கு பலர் விண்ணப்பித்தனர். பலத்த போட்டி எழுந்ததை அடுத்து தேர்தல் மூலம் நிர்வாகிகளை நியமிக்க, ஊர் மக்கள் முடிவு செய்தனர். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போன்று தேர்தல் அலுவலர் நியமனம் செய்தனர். தேர்தல் அதிகாரியாக அதே ஊரை சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனை தேர்ந்தெடுத்தனர். அதன் படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடந்துவருகிறது.

வாக்குச்சாவடி அமைத்து, தேர்தல் கண்காணிப்பாளர், தேர்தல் அலுவலர், வாக்குச்சாவடி முகவர்கள் அமைத்து, வாக்கு சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முழுவதும் கேமரா மூலம் பதிவுச் செய்யப்பட்டுவருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தபால் மற்றும் ஆன் லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படிருந்தது. கிராம தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்தல் பிற பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.