Published:Updated:

‘ஆண்களைவிட பெண்கள் அதிகம்!’ -வேலூர் மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள்

வேலூர் மாவட்டத்தில், 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளதாகவும், இவற்றில் ஆண்களைக் காட்டிலும், பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதாகவும் இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம், 1.1.2019ம் தேதியை, தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு தீவிர சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் கீழ் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் அக்டோபர் 31 வரையில் சுருக்க திருத்தங்களுக்கான படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (31-ம் தேதி) வெளியிடப்பட்டன.

மொத்தம் 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில், 15 லட்சத்து 07 ஆயிரத்து 187 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பெண் வாக்காளர்களும், 145 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த, இறுதி வாக்காளர் பட்டியல், வேலூர் மாவட்டத்தில் உள்ள 1648 வாக்குச்சாவடி மையங்களில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதாக, சப்-கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.