உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்தியா. இங்கு நடைபெறும் தேர்தல் பற்றி தெரிந்துகொள்வோம்!

● தேசத்தின் 17-வது மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மே 23-ம் தேதி, வாக்குகள் எண்ணப்படும்.

●இந்தத் தேர்தலில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

●இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் 90 கோடி பேர். இவர்களில் ஒன்றரை கோடி பேர், முதல்முறை வாக்களிக்கும் உரிமை (18–19 வயதுக்குட்பட்டவர்கள்) பெற்றவர்கள்.

●நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

●தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றம் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

●இதுவரை 16 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. முதல் தேர்தல் 489 தொகுதிகளுக்கு நடந்தது. இது படிப்படியாக உயர்ந்து, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் 543 ஆனது.

●இந்தியா முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுப வர்களும், ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 நியமன உறுப்பினர்களும் இணைந்து, மக்களவை உறுப்பினர்கள் ஆகிறார்கள்.

●மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையில் பாதியைவிட, ஒரு தொகுதி அதிகமாகப் பெறும் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெறும்.

●தேர்தலில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது, அதிக தொகுதிகளை வென்ற தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க, ஜனாதிபதியிடம் உரிமை கோரலாம்.

●ஆட்சி அமைக்கும் தனிப்பெரும் கட்சி, குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

வயது வரம்பு:

●இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது, வாக்களிக்கும் வயது 21. பின்னர், 1988ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் 18 வயதாகக் குறைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

●1951ஆம் ஆண்டிலிருந்து தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வந்தது. 1989 ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, நடைபெற்ற மூன்று மாநில தேர்தல்களில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

●1999ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா மாநிலத் தேர்தலில், அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

●1993 ஆம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரெய்லி முறை வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

●தேர்தல் ஆணையம் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளும் எளிதில் வாக்களிக்க வசதியாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறையை அறிமுகப்படுத்தியது.

தேர்தலில் நோட்டா:

●2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தலில் ‘நோட்டா (None Of The Above)’ என்ற ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்தது. அதன்படி, 2014 ஆண்டு முதல் நோட்டா சேர்க்கப்பட்டது.

●இந்தத் தேர்தலில்தான் முதல்முறையாக Voter verifiable paper audit trail (VVPAT) or verifiable paper record (VPR) என்ற புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளது. ஒரு வாக்காளர் தான் வாக்களித்தவர்க்குதான் அந்த வாக்கு பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் இயந்திரமே இந்த VVPAT.

விடை