நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா?

மீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா?
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா?

மீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா?

ஹலோ வாசகர்களே..!

நா
டாளுமன்றத் தேர்தலில் மீண்டுமொருமுறை மகத்தான வெற்றி கண்டிருக்கிறது பா.ஜ.க கூட்டணி. கூட்டணிக்கு 353 இடங்கள், பா.ஜ.க.வுக்கு மட்டும் 303 இடங்கள் என வியக்கவைக்கிறது இந்த வெற்றி. தனிப் பெரும்பான்மை என்ன, அதைவிட அதிகமாகவே தருகிறோம் என பா.ஜ.க-வுக்கு அமோக ஆதரவு தந்து ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் மக்கள்.

மீண்டும் மோடி... மீண்டும் சாதிப்பாரா?இந்த பெருவெற்றியைத் தொடர்ந்து, மோடியின் தலைமையில் அமைய விருக்கும் புதிய அரசாங்கத்திடம் பலமான பல எதிர்பார்ப்புகளை உருவாக்கி யிருக்கிறது. கடந்தமுறை ஆட்சியின்போது மோடி சந்தித்த சவால்களைவிட இந்தமுறை அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் பலப்பல.

அமெரிக்க - சீன வர்த்தகப் போர் காரணமாக நமது பொருளாதாரம் சிறிது சுணக்கம் காணத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீண்டும் சுறுசுறுப்படையச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். தற்போதிருக்கும் வளர்ச்சி 7 சதவிகிதத்துக்குக் கீழ் செல்ல எந்தவகையிலும் அனுமதிக்கவே கூடாது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கடந்த ஆட்சிக் காலத்தில் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும்விட, இந்த ஆட்சிக் காலத்தில் அதிகமாகக் காட்டவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்பு என்கிற இலக்கினை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும், அதே சமயத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அதிக அளவில் வளர்க்கத் தேவையான அனைத்து நடவடிக்களையும் எடுக்கவும் வேண்டும்.

வாராக் கடன் பிரச்னையிலிருந்து வங்கித் துறையை மீட்டெடுப்பதுடன் அவற்றின் மூலதனத்தை அதிகப்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். வாராக் கடன் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வாக வந்திருக்கும் திவால் சட்டத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி, வேகமாக முடிவு காண வைப்பதன்மூலம் தொழில் துறை புதிய எழுச்சி காணும்.

பொருளாதாரச் சுணக்கத்தினால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து, செலவு செய்வதற்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதினால், விலை குறைந்து எல்லோரும் வாங்கும் நிலை ஏற்பட்டு, உற்பத்தித் துறை சுறுசுறுப்படையும். இதனால் அரசின் வருமானம் குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்யும்.

விவசாயத் துறையில் உற்பத்திப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளை எடுப்பது, புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் பினாமி சட்டத்தைக் கொண்டுவருவது, உலக நாடுகளுடன் போட்டிபோடுகிற அளவுக்கு நமது இளைய சமுதாயத்தின் அறிவு மற்றும் வேலைத்திறனை அதிகரிப்பது, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிப்பது எனப் பல சவால்களை மோடி அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த சவால்களை மோடி அரசாங்கம் சரியாகச் செய்துமுடிக்கும்பட்சத்தில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வே மிகப் பெரிய வெற்றி கண்டு தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

- ஆசிரியர்