Published:Updated:

தே.மு.தி.க இடத்தில் பறக்கும் அ.தி.மு.க கொடி! - மோடி வருகையால் ஏற்பாடுகள் தீவிரம்

தே.மு.தி.க இடத்தில் பறக்கும் அ.தி.மு.க கொடி! - மோடி வருகையால் ஏற்பாடுகள் தீவிரம்
தே.மு.தி.க இடத்தில் பறக்கும் அ.தி.மு.க கொடி! - மோடி வருகையால் ஏற்பாடுகள் தீவிரம்

அ.தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்வதால் தமிழகத்தில் தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் என்பதால் கடந்த ஒரு வாரமாகவே அ.தி.மு.க வரிந்து கட்டிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 28-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைப் பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவதற்கு ஏற்றாற்போல குடிநீர் வசதி, மருத்துவ வசதி, காவல்துறை பாதுகாப்பு, ஹெலிபேடுகள் அமையும் இடம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்தார். மோடிக்கு ஒரு ஹெலிபேடு, பாதுகாப்புக்கு வரும் ராணுவ அதிகாரிகளின் ஹெலிபேடு இரண்டு என மொத்தம் மூன்று ஹெலிபேடுகள் தயாராக இருக்கின்றன. அந்த ஹேலிபேடுகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

முதலில் நடக்கும் அரசு விழாவில் புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து அருகிலேயே அமைக்கப்பட்ட மேடையில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க எனக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க கலந்துகொள்ளுமா என்பது இன்னும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இதனால் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அ.தி.மு.க கொடி பறக்கிறது. நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டனர். மோடி வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.